60 சதவீத சிறார்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். இதற்காக சிறப்பு…

ஆண் பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும்- பெற்றோருக்கு கவர்னர் தமிழிசை…

சென்னையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர். தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது: மாணவர் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில் நன்றாக படிக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். தப்பில்லை. ஆனால் எல்லாவற்றையும்…

தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு விளங்கும்- முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:- சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின…

பொருளாதார இழப்பை சமாளிக்க 12 ஆண்டுகள் தேவைப்படும்- ரிசர்வ் வங்கி…

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி- இந்திய தூதரகம்…

சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர். கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். எனினும் இந்திய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தங்களது படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்…

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம்…

பெங்களூருவில் முககவசம் அணியாவிட்டால் ரூ.250 அபராதம்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா 4-வது அலை தொடங்கி விட்டதா என்று பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா 4-வது அலையை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று…

இந்தி மொழி தேசிய மொழியா?- பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்…

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது தமிழகம் உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்களில்…

மாஸ்கோ மற்றும் கீவ் சென்றுள்ள ஐ.நா. பொதுச் செயலரின் பயணத்தை…

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று ரஷியா சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இதையடுத்து, ரஷியா பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று உக்ரைன் சென்றடைந்தார். அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு…

கொரோனா 4-வது அலையை எதிர்கொள்ள தயார்: பசவராஜ் பொம்மை

இந்தியாவில் 1-வது, 2-வது மற்றும் 3-வது கொரோனா அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசதங்களுக்கும் மத்திய…

தஞ்சை தேர் விபத்து- இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்…

தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகலில் களிமேடு சென்றடைந்த அவர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்…

மருத்துவ மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், 2021-22-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிடும் அடையாளமாக…

பயங்கரவாதத்தால் 64,827 காஷ்மீர் பண்டிதர் குடும்பங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறின-…

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, 1990களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 64,827 காஷ்மீர் பண்டிதர்கள் குடும்பங்கள் வெளியேறி ஜம்மு, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியதாக மத்திய அரசு கூறி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முதன்முதலில் தலைதூக்கிய 1990 முதல் 2020 வரை 14,091 பொதுமக்கள் மற்றும்…

6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த…

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை ரீதியான நிபுணர் குழு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை…

நீட் விலக்கு: போஸ்ட்மேன் வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது…

நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பிரசாரப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவரது உரை பின்வருமாறு: இன்றைக்கு…

ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்

உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவச் செலவு இதுவரை இல்லாத அளவில்  2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியது. 2021ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத்திற்கு செலவு செய்யும்…

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட மேலும் 16 யூடியூப் சேனல்கள்…

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின் தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால…

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட ரெயில்…

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு…

நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரராக ஆகுங்கள்… புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் நிதி மந்திரி…

உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்திய சமூகத்தினரிடடையே உரையாற்றினார்.   அப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறும்படி புலம்பெயர் இந்தியர்களை நிதி…

சீனர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசாவை ரத்து செய்தது இந்தியா

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, சீன பல்கலைக் கழகங்களில் படித்து வந்த ஏறக்குறைய 22,000 இந்திய மாணவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின், அவர்களை சீனாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளும்படி இந்தியா பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது ஏற்கப்படவில்லை. …

பிரதமரின் ஜம்மு பயணம் எதிரொலி- லாலியன் கிராமத்தில் குண்டுவெடிப்பு ?…

நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.…

ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள் –…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாமுன்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடியாக உயர்ந்திருந்ததை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கவனித்தனர். அந்த நிறுவனத்தின் சமீபத்திய பணபரிவர்த்தனை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு…

கொரோனா பரவல் உயர்வு எதிரொலி – முதல் மந்திரிகளுடன் பிரதமர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,079 ஆக உயர்ந்துள்ளது என…