ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று ரஷியா சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
இதையடுத்து, ரஷியா பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று உக்ரைன் சென்றடைந்தார். அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரியை இன்று சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் ஆர்.ரவீந்திரா பேசியதாவது:
மாஸ்கோ மற்றும் கீவ் உள்பட பிராந்தியத்தில் ஐ.நா பொதுச் செயலாளரின் தற்போதைய விஜயத்தை நாங்கள் வரவேற்கிறோம். மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் (UDHR) வரைவு உள்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
உரிய செயல்முறைக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ரத்தம் சிந்துவதன் மூலமும் அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுத்தும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்.
ராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை மோதலின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் உணர்ந்துள்ளோம் ena என தெரிவித்தார்.
Malimalar