அமெரிக்காவைத் தாக்க படைகளுக்கு வடகொரியா ‘அனுமதி’

அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது. அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கு அதன் தளத்தைச் சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு

செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்காக மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையா ளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களைச் சூடுபடுத்தும்போது குளோரினேட்டட் ஹைட்ரோ…

“மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்”

ஒரு குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை அவரது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன்…

மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் வெளியாகின

யாங்கூன்: மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே…

சிறைகைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோமில் ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அங்கு கெஸல் டீல்…

புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு புரளி

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின், புகழ் பெற்ற, 'ஈபிள்’ கோபுரத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த, 1,500 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ், தலைநகர் பாரீசில், உலக அதிசயங்களில் ஒன்றான, 'ஈபிள் டவர்’ உள்ளது. இந்த கோபுரத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில்…

கடாபியின் குடும்பத்தினருக்கு ஒமான் புகலிடம் வழங்கியுள்ளது

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஒமான் அறிவித்துள்ளது. சர்வதேச போலிஸாரினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின்…

9 வயது சிறுமி உதவிக்காக நடுஇரவில் அழைந்த சோகம்

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த  அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது. பின்னர் அங்கிருந்து…

மியான்மர் கலவரத்தில் மேலும் 3 நகரங்கள் நாசம்

மியான்மரில் மெய்த்திலா நகரில் முஸ்லிம் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில், முஸ்லிம்களின் குடியிருப்புகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் அங்கு 32 பேர் கொல்லப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறினர். எனவே, அங்கு கலவரம் பரவாமல்…

பர்வேஸ் முஸாரப் பாகிஸ்தான் திரும்பினார்

தானாகவே 4 வருடங்கள் நாடு கடந்து வாழ்ந்த முன்னாள் பாகிஸ்தானிய அதிபரான பர்வேஸ் முஸாரப் அவர்கள் நாடு திரும்பியுள்ளார். அவரது விமானம் கராச்சியில் தரையிறங்கிய போது அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி அவரை வரவேற்றார்கள். மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு அவர்…

கூகுளின் ‘ஆண்ட்ராய்டு’ பிரிவு தலைவராக தமிழர் நியமனம்

சான் பிரான்சிஸ்கோ: பிரபல 'கூகுள்' இணையதள நிறுவனத்தின், 'ஆண்ட்ராய்டு' பிரிவின் தலைவராக, இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மார்ட் போன்கள் மற்றும் சிறிய வகை மடிக்கணினிகளை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட்…

சாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா?

காரகஸ்: அன்னிய நாட்டு உளவுத்துறையினரின் சதிச் செயலால்தான் அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணமடைந்தார் என்று குற்றசசாட்டு எழுந்திருப்பதால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று வெனிசூலா நாட்டு எண்ணை வளத்துறை அமைச்சர் ரபேல் ரமீரேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபரின் மரணத்திற்கு வெளிநாட்டு உளவுத்துறையினரின் சதி காரணமாக இருக்கலாம் என்று…

ஐரோப்பாவைச் சேராதவர் போப் ஆண்டவராக தேர்வு

வாடிகன்: ஐரோப்பா அல்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர், 1,300 ஆண்டுகளுக்கு பின், போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போப் ஆண்டவராக இருந்த பெனடிக்ட், உடல்நிலை மற்றும் வயோதிகத்தின் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. இத்தாலி நாட்டின், வாடிகன் நகரில், கத்தோலிக்க…

ஜனநாயக லீக் கட்சி தலைவராக அவுங் சாங் சூச்சி மீண்டும்…

யாங்கூன்: மியான்மரில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக, அவுங் சாங் சூச்சி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் ஜனநாயக தலைவரான அவுங் சாங் சூச்சி, 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால்,…

கென்யாவின் அதிபராகத் துடிக்கும் ஒபாமாவின் அண்ணன்

நைரோபி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல…

சிரியா உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளி போராளிகள்

டெல்லி: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளிப் போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சிரியா நாட்டு போரில் இந்திய வம்சாவளி போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த ஆசாத்தின் அரசியல் ஆலோசகர் ஷாபான்…

காணாமல் போன ரஷ்ய வீரர் 33 ஆண்டுக்கு பிறகு ஆப்கனில்…

மாஸ்கோ: காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில்,…

மாலி சண்டையில் 10 பிரான்ஸ் வீரர்கள் பலி

பாரீஸ்: மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலி இராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி இராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல் பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே…

மாலைதீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீண்டும் கைது

மாலைதீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு தலைநகரான மாலேவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் இதன் போது பெருந்தொகையான போலிஸார் அங்கிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும்…

புரட்சியாளரும் வெனிசுலா அதிபருமான சவேஸ் காலமானார்

கார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன்…

புதியதாக உருவாகிறது ‘டைட்டானிக் 2’

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை யாராலும் மறக்க முடியாது. கடலில் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த கப்பலைப் போலவே புதிய கப்பலை உருவாக்க முடிவு செய்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மெர். அதற்காக, டைட்டானிக்-2 கப்பலின் மாதிரி வடிவமைப்பை நியூயார்க்கில் அவர் வெளியிட்டார்.…