அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
உக்ரேனுக்கு வழங்கவிருந்த அமெரிக்க ஆளில்லா வானூர்தி விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
உக்ரேனுக்கு வழங்கவிருந்த நான்கு பெரிய ஆயுதமேந்திய ஆளில்லா வானூர்திகளை விற்கும் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிர்வாகம் நடத்திய ஆழமான மதிப்பாய்வின் போது விற்பனைக்கான ஆட்சேபனை எழுப்பப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக் கருதி திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். உக்ரேனுக்கு நான்கு MQ-1C…
ஒமைக்ரான் வைரஸ் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தாது- ஆய்வில் தகவல்
ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது. என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா…
ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. காபூல், ஜூன்.18- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குருத்வாரா கர்கே பர்வான் பகுதியில் குண்டுகள் வெடித்தன.…
உக்ரைனுடன் துணை நிற்போம் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…
உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100…
பயங்கரவாத நிதியுதவி விவகாரம் – சாம்பல் நிறப் பட்டியலில் நீடிக்கிறது…
யங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்காத நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அண்டை நாடான பாகிஸ்தானை கிரே பட்டியலில் இருந்து நீக்க மறுத்துவிட்டது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி…
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை ஒப்புதல்
அமெரிக்கா கொடுத்த நெருக்கடி காரணமாக இங்கிலாந்தின் ஈக்வடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே 2019-ல் கைது செய்யப்பட்டார். அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள்…
சீனாவில் கொரோனா பரவல்- ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு
ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு…
இறுதி கட்ட போர் தீவிரம்- உக்ரைனில் 3 முக்கிய பாலங்களை…
போர் தொடங்குவதற்கு முன்பு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வந்த செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். ரஷிய படைகளின் இறுதி தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நகரம் இன்னும் ஓரிரு நாளில் வீழ்ந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.…
குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் – உலக சுகாதார…
உலகளவில் 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குரங்கு அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆப்ரிக்காவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் இன்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் இதுவரை 39…
எரிபொருள் இறக்குமதி- உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்
இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது.…
தென் கொரியா எல்லையில் பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா சோதனை
சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது. தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான்…
அலுவலகத்தில் பாலின பாகுபாடு- பெண் ஊழியர்களுக்கு ரூ.922 கோடி இழப்பீடு…
கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது…
டென்னிஸ் தரவரிசை – ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்…
நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார். டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950…
உக்ரைனில் அழிக்கப்படும் உணவு தானியங்கள்… விவசாயிகள் கண்ணீர்
டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் உக்கிரமான தாக்குதலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உலக தானிய சந்தையில் முக்கிய…
நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து உலக வரலாற்றில் சாதனை படைத்த…
தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக இருந்தார். பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். லண்டன் இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம்…
உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்
கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு 10000 இணையதள கருவிகளை எலான் மஸ்கின் ஸ்டார் லைட் நிறுவனம் அனுப்பியது. தற்போது உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி…
தைவானுக்கு உதவும் போர்வையில் அமெரிக்கா ஆதிக்கத்தை நிறுவுகிறது- சீனா குற்றச்சாட்டு
பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. அமெரிக்கா ஆசிய நாடுகளிடம் அச்சத்தை உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிறுத்துகிறது. சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய்…
போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது –…
உக்ரைனில் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது தினசரி காணொளி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் கிழக்கில் ரஷ்ய துருப்புக்களின் கைப்பற்றும் நடவடிக்கைகளை தமது ஆயுதப்படைகள் தடுத்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.…
பாகிஸ்தானில் வெளிநாட்டு வேலை தேடுவோர் எண்ணிக்கை உயர்வு
கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் வெளிநாட்டு வேலையை தேடுவோரின் எண்ணிக்கை 27.6 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள இழப்பு, கொரோனா பெருந்தொற்று…
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி…
ரஷிய தாக்குதலில் மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் பலி…
ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது. உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி இதுவரை…
மனித சடலங்களால் விஷமாக மாறிய தண்ணீர்: காலராவால் சாவின் விளிம்பில்…
மரியுபோல் நகரத்தின் நீர் விநியோகங்களில் கலக்கும் மனித சடலங்களின் விஷங்களால், காலரா தொற்று தீவிரமாக பரவி நகரில் ஆயிரக்கணக்கானவர்களை கொல்லக்கூடும் என அந்த நகரின் மேயர் வாடிம் பாய்சென்கோ எச்சரித்துள்ளார். உக்ரைனின் மிகமுக்கியமான துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவ படைகள் பல வார முற்றுகைக்கு பிறகு, முழுவதுமாக…
ஊழியர் பற்றாக்குறையால் சிரமப்படும் ஆஸ்திரேலியா
ஊழியர் பற்றாக்குறையால் ஆஸ்திரேலிய வர்த்தகங்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றன. போதிய ஊழியர்கள் இல்லாததால் திட்டமிட்டபடி அவற்றால் சேவை வழங்க முடியவில்லை. குறைந்த நேரத்துக்கு மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவதால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரான ஆண்டனி அல்பனிசிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின்…