கிர்குக்கிற்கு படைகளை அனுப்பும் இராக்கிய குர்துகள்

இராக்கின் அரசுப் படைகள் சர்ச்சைக்குரிய கிர்குக் பிராந்தியத்தை மீண்டும் மீட்கும் என்ற அச்சத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான குர்து போராளிகள் அந்நகருக்கு விரைந்துள்ளனர். தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தின் துணைத் தலைவர் கொஸ்ராத் ரசுல், ராணுவத்தின் "அச்சுறுத்தல்களுக்கு" இதன் மூலம் பதிலளிப்பதாக தெரிவித்தார். பிரதமர் ஹைதர் அல்-அபாதி இராக்கிய குடிமக்களுக்கு எதிராக…

6.0 நில நடுக்கம் வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க…

சில மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய ஹைட்ரஜன் குண்டை பெரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.00 யை எட்டியுள்ள இந்த…

ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு…

பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில் இருக்கும் அகதிகளையும் சந்தித்து, உரையாடி இருக்கிறார். அங்கிருந்து அவர் வழங்கி இருக்கும் செய்தி. மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் அவலங்களை எதிர்கொள்ளும்…

மார்பகங்கள் வந்துவிட்டால் போதும்: அவரை கற்பழிக்கலாம் ! உள்ளக தகவலோடு…

உலகில் மிக மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பாக ஐ,எஸ் கருதப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, அவர்கள் காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள் தற்போது உலகிற்கு மெல்ல மெல்ல தெரியவர ஆரம்பித்துள்ளது. காட்டு மிராண்டிகள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள் என்கிறார், இவர்களிடம் தப்பிப் பிழைத்த ஒரு பெண்.…

50 வருட வளர்ச்சி ஒரே வாரத்தில் போச்சு, 2.5 லட்சம்…

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் தொடரும் காட்டுத் தீ. மொத்த நகரத்தையே தீக்கு இரையாக்கியது. சாண்டா ரோசாவின் காடுகளில் எரியத் தொடங்கிய இந்தத் தீ நகரம் முழுக்க பரவியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, பத்து பேராக இருந்த மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆகி…

‘எங்களுடைய இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள்’ அமெரிக்காவிடம் சீனா சொல்கிறது

பெய்ஜிங், தென் சீனக்கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா, அங்கு செயற்கை தீவுக்கூட்டங்களை உருவாக்கி ராணுவ நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கடல் எல்லையில் அமைந்துள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட…

கொரிய தீபகற்ப பகுதியில் பறந்த அமெரிக்க குண்டு வீச்சு போர்…

சியோல், உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது.…

அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள்

வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது. தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து இந்த தகவல் வெளிவந்ததாக, தென் கொரிய…

கேட்டலோனியா தனி நாடு பிரகடனம் இடை நிறுத்தம்: கேட்டலன் தலைவர்…

கேட்டலோனியா ஸ்பெனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவதை இடைநிறுத்தம் செய்வதாக கேட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஸ்பெயின் அரசுடன் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தும் நோக்கில், சில வாரங்களுக்கு இந்த அறிவிப்பை இடைநிறுத்தி வைப்பதாக அவர் கூறியுள்ளார். பார்சிலோனாவில் உள்ள அந்தப்…

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்!

  பெய்ஜிங், சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும், இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும்…

துருக்கி, அமெரிக்கா இடையே விசா நடவடிக்கைகள் பரஸ்பரம் நிறுத்திவைப்பு

இஸ்தான்புல், துருக்கியில் கடந்த ஆண்டு முறியடிக்கப்பட்ட ராணுவ புரட்சியின் பின்னணியில், அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கி மதபோதகர் பெதுல்லா குலன் இருப்பதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. எனவே அவரை நாடு கடத்துமாறு அமெரிக்காவை வேண்டி வரும் துருக்கி, அவருடன் தொடர்புடைய சொந்த நாட்டு அதிகாரிகளை களையெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு…

கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின்…

கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்ளார். மேலும் , கேட்டலோனியா பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையை இடை நிறுத்தப்படும் சாத்தியக்கூறையும் தான் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார். 'எல் பெய்ஸ்'…

வட கொரியாவுடன், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும்` – அதிபர் டிரம்ப்

வட கொரியாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத நிலையில், `ஒரே ஒரு விஷயம் மட்டுமே பலனளிக்கும்` என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில், `(அமெரிக்க) அதிபர்களும் அவர்களின் நிர்வாகிகளும் கடந்த 25 ஆண்டுகளாக வட கொரியாவுடன் பேசி வருகின்றனர். இருந்தும் எதுவும் நடக்கவில்லை`…

ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வலியுறுத்தி மக்கள் பேரணி

ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தில் கடந்த ஞாயிறன்று நடந்த சர்ச்சைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் அம்மாகாணம் ஸ்பெயினிடம் இருந்து பிரிந்துபோய் தனி நாடாகவேண்டும் என்பதற்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. இந்நிலையில் ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் தலைநகரில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாட்ரிட்டில் ஒற்றுமையை…

மிகை பணி கலாசாரம் – ஜப்பான் நிறுவனத்துக்கு சிக்கல்

பணியாளர்களை அளவுக்கு அதிகமாக மிகைநேரப்பணியில் ஈடுபடுத்தியதால் டெண்ட்சு என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இத்தகைய வழக்கம் பரவி வரும் நிலையில் அதனை கட்டுபடுத்தும் விதமாக இந்நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சட்ட விதிகளை மீறியதற்காக டோக்யோ நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு 4,400…

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் பகுதியில் சூபி பிரிவினர் அதிகம் உள்ளனர்.  அங்குள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் கூடியிருந்தனர்.  அப்போது சந்தேகத்திற்குரிய  நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றான். அப்போது அவனை பாதுகாப்பு   பணியில் இருந்த  போலீஸ்காரர் தடத்து நிறுத்தினர். உடனே அவன்தான் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை…

அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதங்களை தடை செய்ய கோரும்…

ஆஸ்லோ, கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில்…

கேட்டலோனியா தலைவர் பூஜ்டியமோனை கண்டித்த ஸ்பெயின்

(இடது) கார்லஸ் பூஜ்டியமோன், (வலது) அரசர் ஆறாம் ஃபெலிப்பே கேட்டலானின் சுதந்திரத்தை அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாக அதன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் அரசாங்கம், நாங்கள் இந்த மிரட்டலுக்கு அஞ்சபோவதில்லை என கூறியுள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு…

இராக் படையினரிடம் ஹவிஜா நகரை இழந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இறுதி நிலப்பகுதிகளில் ஒன்றான ஹவிஜாவை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக இராக் அரசு படைகள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் (புதன்கிழமை), 196 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாகவும், 98 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் ஹவிஜா நகர் கடந்த 2014…

பாகிஸ்தான் வழிக்கு வரவில்லை என்றால் எந்தஒரு நடவடிக்கைக்கும் தயார் -அமெரிக்கா…

பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் எந்தஒரு நடவடிக்கைக்கும் தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் அரசு பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு…

`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்’

கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்பெயினிலிருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த வாக்கெடுப்பிற்கு பின் முதன்முதலாக பிபிசி-க்கு பேட்டி அளித்த கேட்டலோனியாவின் தலைவர்…

லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு எங்கிருந்து எப்படி நடத்தப்பட்டது?

லாஸ் வேகஸில், ரூட் 91 என்ற மூன்று நாள் நாட்டுப்புற இசைத் திருவிழாவின் கடைசி நிகழ்ச்சிமுழு வீச்சில் நடந்துகொண்டிருந்த போது, 64 வயதான ஸ்டீஃபன் பேடக் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். தாக்குதல் நடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி மாண்டலே பே ஹோட்டலில் உள்ள…

ரோஹிஞ்சாக்கள் பற்றிய காணொளி: பர்மிய அழகியின் பட்டம் பறிப்பு

பர்மிய அழகு ராணி ஒருவர், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் நடக்கும் வன்முறை குறித்து தான் பதிவேற்றிய ஒரு காணொளியின் காரணமாக தனது பட்டத்தை இழந்துவிட்டதாக கூறியுள்ளார். ஸ்வே எய்ன் ஸி என்னும் அந்த அழகி, மியான்மரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக ரோஹிஞ்சா போராளிகளை குற்றஞ்சாட்டி ஒரு காணொளியை கடந்த வாரம்…