தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து அழிக்க அமெரிக்கா உதவியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலத்தில் விடுதலைப் புலிகளின் 12 மிதக்கும் ஆயுத களஞ்சியங்கள் அழிக்கப்பட்டன.
அவற்றை அழித்தொழிக்க அமெரிக்க தனது முழுமையான ஆதரவை வழங்கியது. கடற்புலிகளின் ஆயுத விநியோக கப்பல்கள், இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டதால், யுத்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 களஞ்சியங்களை அழித்தோம் அமெரிக்கா மிகவும் உதவியாக இருந்ததால் இது சாத்தியமானது. ஆயுத கப்பல்கள் இருந்த இடங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா வழங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தைகளில் கொள்வனவு செய்யப்பட்டவை. புலிகளிடம் இருந்த பீரங்கிகளில் பெரும்பாலானவை வடகொரியா மூலத்தை கொண்டவை.
புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன. இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்தன அல்லது சில சமயம் இலங்கை இராணுவத் திட்டமிருந்ததைவிட கூடுதலானவையாகவும் இருந்தன. புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தின.
புலிகளின் கப்பல்கள் இருக்கும் இடங்களை அமெரிக்க செய்மதி தொழில்நுட்பங்கள் காட்டிக்கொடுத்தன. இதனடிப்டையில் வழங்கப்பட்ட தகவல்களின்படி இலங்கை கடற்படையினரால் அவற்றை அழிக்க முடிந்தது.
இலங்கையின் போர் குறித்து அமெரிக்கா நிலையைான போக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் புலிகளை நியாயப்படுத்தவுமில்லை, இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்கவுமில்லை.
எனினும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றிடம் இருந்து இலங்கையால் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடிந்தது என்று கோத்தபாய கூறியுள்ளார்.
உனக்கு புலிகளிடம் போரிட தைரியம் இல்லை அடுத்தவன் துணை
நாடினாய் .அப்புறம் குடும்பம் நடத்த முடியல என்று அடுத்தவன் துணை …….
அடடா,என்ன ஞானம்!என்ன ஞானம்! நீர் அல்ல உன் அப்பன்,பாட்டன் முப்பாட்டன் எவன் நினைத்தாலும் தமிழனை அடக்க முடியாதுடா முதேவி! முயற்ச்சி செய்து பாரும்! அமெரிக்க மட்டும் அல்ல இன்னும் ஏராளம் ஏராளம் பேடிகள் ஒன்றாக சேர்ந்துதான் ஈழ தமிழனை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது…
ஆழ பிறந்தவன் தமிழன்,அடங்க அல்ல…
-நல்ல கருத்து சாமுண்டி…
அமெரிக்கனின் தில்லாலங்கடி வேலை யாருக்கு தெரியாது ? தீவீரவாதியை (விடுதலை புலி ) ஒழிப்பதாக சொல்லி உன்னிடம் கூட்டு சேர்ந்தான் ! இஸ்ரேல் நாடு ஆயுதங்களை வழங்கியது ! இப்போது சீனா துறைமுகம் மற்றும் ராணுவ தளத்தை அமைக்கிறது , அமெரிக்கா un சார்பில் மறைமுகமாக இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்கிறது ! சீனா இலங்கை வருவதால் அமெரிக்கனின் ‘நீதி தேவதை’ உயிர் பெற்று ,இலங்கையில் போர் குற்றம் நடைபெற்றதுக்கு ஆதாரம் தேடுகிறது !