இன்று, இரண்டு சுற்றுச்சூழல் என்ஜிஓ-கள் நாடாளுமன்றத்தின் தலைவாசலில் கூடி நின்று, லைனாஸ் அரிய மண் ஆலைக்கு எதிராகவும் சரவாக் அணைக்கட்டுகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தன.
சேவ் மலேசியா, ஸ்டோப் லைனாஸ் (எஸ்எம்எஸ்எல்) அமைப்பையும் அணைக்கட்டு எதிர்ப்புக் குழுவையும் சேர்ந்த சுமார் 60 சமூக ஆர்வலர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
லைனாஸ் ஆலை மூடப்பட வேண்டும், சரவாக்கில் எல்லா அணைக்கட்டுத் திட்டங்களையும் நிறுத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டதுடன் தங்கள் போராட்டத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு அட்டைகளையும் ஏந்தி நின்றனர்.