முன்னாள் கெடா மந்திரி புசாரும் சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அசிசான் அப்துல் ரசாக், இன்று காலை மணி 11.15-க்கு, அலோர் ஸ்டார் சுல்தான் பாஹியா மருத்துவமனையில் காலமானார்.
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் அச்செய்தியை உறுதிப்படுத்தியதாக பெரித்தா ஹரியான் கூறியது.
இதன் காரணமாக அம்மாநிலத்தில் விரைவில் ஒரு இடைத் தேர்தல் நடைபெறும். அது, மே 5 பொதுத் தேர்தலுக்குப்பின் நடக்கும் இரண்டாவது இடைத் தேர்தலாக இருக்கும். இதற்குமுன் கோலா பெசுட்டில் முதலாவது இடைத் தேர்தல் நடந்தது.
முன்னாள் மந்திரி புசார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !
கெடாவில் பி கே ஆர் கட்சியில் அநியாயமாக வெளி ஏற்றப்பட்ட முன்னாள் ஆச்சி குழு உறுப்பினர் மணிகுமரன் இப்போது இங்கே சுங்கை லீமாவில் போட்டி இடலாமே? சும்மா வெளி ஆளா பேசப்படாது ! தமிழன் என்றால் தனி வீரம் வேண்டும்.