முக்ரிஸ்: மசீசவும் கெராக்கானும் டிஏபி-யைக் காட்டிலும் ‘இனவாதம் மிகுந்தவையாக’ தெரிகின்றன

1 mukசீன வாக்குகளைப் பெற வேண்டும் என்ற வேட்கையில் மசீசவும் கெராக்கானும்  ‘இனவாதம்’ பேசுவதில் டிஏபி-யையும் மிஞ்சி விட்டன என்று முக்ரிஸ் மகாதிர் சாடியுள்ளார்.

“அவற்றின் பேச்சு பிஎன்னை வலுப்படுத்துவதற்கு உதவுமா என்பதை அவை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஏபி இனவாதம் மிக்கது என்பது தெரிந்ததே.

“ஆனால், மசீசவும் கெராக்கானும் சீன வாக்குகளைக் கவர்வதற்காக டிஏபி-யைக் காட்டிலும் மிகுந்த இனவாதம் கொண்டவையாக தெரிகின்றன……இதுதான் அவர்களின் சிந்தனை என்றால் அது பிஎன் கூட்டணிக்கு உதவாது”, என்று பெரித்தா ஹரியானிடம் அவர் தெரிவித்தார்.

கெடா மந்திரி புசாரான முக்ரிஸ்,  அம்மாநிலத்தில் சீனப் பள்ளிகளுக்கு உதவப் போவதில்லை என்று கூறியதற்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அதற்கு எதிர்வினையாற்றிய மந்திரி புசார் இவ்வாறு சாடினார்.

TAGS: