மசீச தலைவர் டாக்டர் சுவாஅ சொய் லெக், துணைத் தலைவர் லியோ தியோங் லாய் கட்சிக்குத் தலைவரானால் அது இன்னொரு கெராக்கானாக மாறும் எனக் கூறியதற்காக கெராக்கானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஆனாலும் தாம் சொல்லியது சரியே என்றவர் வாதாடுகிறார்.
“மசீச-வை அம்னோவுடன் அல்லது மஇகாவுடன் ஒப்பிடுவதற்கில்லை என்பதால் தன்னை ஒரு பல்லினக் கட்சியாகக் காண்பிக்க முயலும் சீனர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியுடன் அதை ஒப்பிட்டேன். அது துரதிர்ஷ்டவசமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது சரியான ஒப்பீடுதான்”, என்றவர் சொன்னார்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
இவர் அரசியலை விட்டு விலகி பட தயாரிப்பாளர் ஆனால்
நல்லது .