காஷ்மீர் விஷயத்தில் தீர்வு காண அமெரிக்கா தலையிட வேண்டும்: பாக்., பிரதமர் நவாஸ் வலியுறுத்தல்

nawazஇஸ்லாமாபாத்:மத்திய கிழக்கு நாடுகளுக்காக செலவிடப்படும் நேரத்தில், 10 சதவீதத்தை ஒதுக்கினால், காஷ்மீர் பிரச்னை தீருவதற்கு வாய்ப்புள்ளது,”என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, அவர் இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:காஷ்மீர் விஷயத்தில் தீர்வு ஏற்பட, அமெரிக்கா தலையிட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு செலவிடும் நேரத்தில், 10 சதவீதத்தை காஷ்மீருக்காக ஒதுக்கினால், இந்த பிரச்னை தீர்வதற்கு வாய்ப்புள்ளது. காஷ்மீர் விஷயத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை, இந்தியா விரும்பவில்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் வெளிநாடுகள் தலையிட்டால் தான், தீர்வு காண முடியும்.

இருநாடுகளுக்கிடையே, 60 ஆண்டுகளாக ஆயுத போட்டி நிலவுகிறது. இந்தியா, அணு குண்டு தயாரித்தது; நாங்களும் தயாரித்தோம். இந்தியா ஏவுகணை தயாரித்தது; நாங்களும் தயாரித்தோம். இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, பாகிஸ்தானில், ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இதை வலியுறுத்துவேன்.இவ்வாறு, நவாஸ் ஷெரீப் கூறினார்.

Click Here