இன்று, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவுக்கு வந்தபோது பாஸ் வேட்பாளரையும் பிஎன் வேட்பாளரையும் தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த இடைத் தேர்தல் பிஎன்னுக்கும் பாஸ் கட்சிக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமையும் என்பது உறுதியாயிற்று.
அங்கு பாஸ் கட்சியின் முகம்மட் அஸாம் அப்துல் சமட்டை எதிர்த்து பிஎன்னின் அஹ்மட் சுஹாய்மி லாஸிம் களம் இறங்குகிறார்.
சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கெடா மந்திரி புசாருமான அசிசான் அப்துல் ரசாக், செப்டம்பர் 26-இல் காலமானதை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
எனக்கு ஒன்னும் புரியவில்லை /……….அவன் சரி இல்லையென்று .,இவனக்கு ஓட்டு போட்டால்,,இவனும் அப்படியே ,,சிகிச்சை பெரும் மகனை கான மருத்துவமனைக்கு சென்ற நேரம் ..வேறு இனத்தின் கட்சி தலைவர்கள் ,வந்தார்கள் அவர்களின் இனத்தவர்களாக பார்த்து பார்த்து கைகொடுதார்கள் சிரித்து நலம் விசாரித்தார்கள் சென்றார்கள் ……….அப்பொழுது நாம்?