பொருள்கள், சேவைகள் வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்படுவதால் பொருள் விலைகள் உயரா என்பதற்கு உத்தரவாதம் உண்டா? அப்படியெல்லாம் உத்தரவாதம் அளிக்க இயலாது என்கிறார் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசம் மாலிக்.
“இந்த உலகத்தில் எதற்கும் உத்தரவாதம் இல்லை…..இப்போதைக்கு, எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யலாம், அவ்வளவுதான்”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர். கூறினார்.
ஜிஎஸ்டி தொடர்பில் ஊகங்கள் வேண்டாம் , 2014 பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்வரை பொறுத்திருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.