அடுத்தடுத்து இரண்டு பொதுத் தேர்தல்களில் பெருந் தோல்வி கண்ட கெராக்கான் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், முதலில் பிஎன் அரசியல், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்பதை நன்கு ஆராய வேண்டும். இவ்வாறு கூறுகிறார் கெராக்கான் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ள மா சியு கியோங்.
கெராக்கான் எல்லாவற்றிலும் அம்னோவிடம் “மண்டியிடுகிறது” என்று பொதுமக்களிடையே உருவாகியுள்ள ஒரு தோற்றத்தை மாற்ற வேண்டும் என்றாரவர்.
என்றாலும், 13வது பொதுத்தேர்தலில் கெராக்கான் படுதோல்வி அடைந்ததற்கு அம்னோ முக்கிய காரணம் அல்ல என்று கூறிய கெராக்கான் இடைக்கால தலைமைச் செயலாளரான மா, பல காரணங்களில் அதுவும் “ஒன்று”, என்றார்.
அப்படியானால் கெராக்கன் அம்னோவை எதிர்க்கப்போகிறதா என்று வினவியதற்கு, “எந்தக் கட்சியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தப்பு என்றால் அதை எதிர்க்கத்தான் வேண்டும்”, என்றார்.
சனிக்கிழமை கெராக்கான் பேராளர் கூட்டம் நடைபெறுகிறது. அதில் தலைவர் பதவிக்கு மாவும் பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோவும் போட்டியிடுகின்றனர்.
எப்படி மண்டியிட்டு umno காரன் காலை நக்கி சம்பாதிக்கலாம்
என்று உங்கள் ஆட்களுக்கு சொல்லி கொடுங்கள் .