மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன்

michael_jackson_001மரணத்திற்கு பின்னரும் அதிகம் சம்பாதித்து நம்பர் 1 ஆக பட்டியலில் இடம்பிடித்துள்ளார் பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை உலகளவில் மரணமடைந்த பிரபல பணக்காரர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டது.

இதில் மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடத்தில் உள்ளார்.

இவரது நிறுவனம் கடந்தாண்டில் ரூ.965 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக கிங் ஆப் ராக் அன்ட் ரோல் என்ற இசை ஆல்பம் அமோகமாக விற்று சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் 1977ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகள் லிசா- மேரி மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி ஆவார்.

கார்டூனிஸ்ட் சார்லஸ் எம் சுலோஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் பிரபல அறிவியல் மேதை ஐஸ்டீனும் இடம் பெற்றுள்ளார்.

உயிருடன் வாழும் பிரமுகர்களில் பணக்காரர் பட்டியலில் கவர்ச்சி பொப் பாடகி மடோனா முதலிடம் வகிக்கிறார்.