மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்ட மருத்துவர் முர்ரே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இவரது மரணத்திற்கு மருத்துவர் முர்ரே அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மாத்திரைகளை வழங்கியது தான் காரணம் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2011ம் ஆண்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே இதுகுறித்து வழக்கு விசாரணையை கடந்த இரண்டு மாதங்களாக நீதிபதிகள் குழு விசாரித்து வந்தது.
இந்நிலையில் இவரது கவனக்குறைவாலேயே மைக்கேல் ஜாக்சனின் மரணம் நிகழ்ந்ததுள்ளது, மேலும் மருத்துவரின் நன்னடத்தையை கவனத்தில் கொள்கையில், டாக்டர் முர்ரே அவரது கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் நெவாடாவில் உள்ள மருத்துவ உரிமையை புதுப்பித்துக்கொண்டு அவரது பணியை சிறப்பாக தொடரலாம் என்று லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் அவரை விடுதலை செய்துள்ளார்.
இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி இன்று காலை லாஸ் ஏஞ்செல்ஸ் சிறைச்சாலையின் பின்புற கேட்டின் வழியாக ஷெரிப்பின் காரிலேயே டாக்டர் முர்ரே பத்திரமாக அழைத்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர் விடுதலையாவது குறித்த செய்தியறிந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சிறை வாசலில் காத்து நின்று ஏமாந்து போயினர்.
டாக்டர் தப்பித்து செல்வதற்கு உதவியதாக ரசிகர்கள், லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.