பிரதமரை அவருடைய வாழ்க்கை முறையை மாற்றிகொள்ளுமாறு கேட்டுக்கொள்வது உலக நடப்புக்கு முரணானதோ, நியாயமற்றதோ அல்ல. பக்கத்தான் மாநில அரசாங்கத் தலைவர்கள் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை என்று பாஸ் இளஞர் பிரிவு தலைவர் ஒருவர் கூறுகிறார்.
பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்திற்கான மின்சாரக் கட்டணம் ரிம2.5 என்ற தகவல் மீது கருத்து தெரிவித்த கூட்டரசுப் பிரதேச பாஸ் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் முகமட் சுகைமி இத்தொகையை உதவி தேவைப்படுவோருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றார்.
கிளந்தான், கெடா மற்றும் திரங்கானு ஆகிய மாநில அரசுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த பாஸ் தலைவர்கள் மந்திரி புசார்களாக செயல்பட்ட போது அவர்கள் அதிகாரத்துவ இல்லங்களில் வாழவில்லை. மாறாக, அவர்களின் சொந்த வீட்டில்தான் வாழ்ந்தனர் என்றார்.
“உண்மையில், அவர்கள் தங்களுடைய அனைத்து அலவன்ஸ்களையும், உபசரிப்பு அலவன்ஸ் உட்பட, மக்களிடமே கொடுத்தனர்.
“(முன்னாள் கிளந்தான் மந்திரி புசார்) நிக் அப்துல் அசிஸ் அவருடைய பல்லாயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள அலவன்ஸ்கள் அனைத்தையும் கிளந்தான் மாநில அரசிடமே திருப்பிக் கொடுத்தார்”, என்று சுகைமி மேலும் கூறினார்.
அவ்வாறே, பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங்கும் மாநில காரியங்களுக்கான பயணம் மேற்கொள்ளும் போதும் சிக்கன வகுப்பில்தான் பயணம் செய்கிறார் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
மக்கள் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தலைவர்கள் சுலோகம் எழுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் அதற்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள தவறிவிடுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
ஊருக்கு ஒரு நியாயம், தனக்கு ஒரு நியாயம் என்பதுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரம் என்பதை சொல்லாமல் காட்டுகின்றார் நமது பிரதமர். வாழ்க மைனாரிட்டி மடையர்கள் ஜனநாயகம்.
அன்வார் பிரதமரானால் அதிகாரத்துவ மாளிகைக்கு குடிபுக மாட்டேன் என்று உறுதியளித்தார்! நஜிப்பு,ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை யடி ரோசம்மா!
umno அரசாங்கம் சுகம் ,பணம் ,அனுபவிக்க மக்களின் பணத்தை சுரண்ட புது வழி ஏற்பாடு செய்து விட்டார்கள் .
எல்லா அரசியல் வாதிகளும் ஆடம்பரமாக வாழ விரும்பியதில்லை . உதாரணம் , நமது கொடைவள்ளல் துன் சம்பந்தன் அவர்களை சொல்லலாம் .தோட்டப்புற மக்களுக்காக அரசனாய் இருந்து ஆண்டியான்வர்தானே அந்த உத்தமர் . இன்னும் எத்தனையோ நல்ல உள்ளங்கொண்ட அரசியல்வாதிகள் இல்லை மறை காயாகவே இருக்கிறார்கள். அவர்களையும் சாக்கடை பட்டியலில் சேர்த்துவிட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் !!
“மின்சார கண்ணன் “