“சோகம்” மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்

உருமாற்றம் சிந்தனை  உரம்பெற “சோகம்” மாநாட்டை   பிரதமர்  புறக்கணிக்க  வேண்டும்-
உலக தமிழர் பாதுக்கப்பு இயக்கம் மலேசியா.
1 bn najib

தமிழ் ஈழம்  – இலங்கை மக்கள் குழப்பத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு எதிர்ப்பாகவும் பிறகு நடு நிலை நின்ற மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் நஜீப் அவர்ககளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் .

மலேசியத்தமிழர்களின் /இந்தியர்களின் இரத்த உணர்வுகளுக்கு மதிபளித்து சோகம் மாநாட்டிற்கு  மலேசியா போகாமல் இருப்பது நமக்கு நன்மை பயக்கும். இதனால்  ம  இ காவில் அடுத்த கட்ட பி என்னுடனான அரசியல் வளப்பத்துக்கும் மலேசிய தமிழர்களின் நம்பிக்கைக்கும் இது அதி முக்கியம் வாய்ந்த இசைவாக இருக்கும் என நம்பலாம்.இதில் எதிர்கட்சிகள், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி கொச்சங்கள் கோசங்கள் எல்லாம் ஊர் மெச்சிக்க மல்லக் கொட்ட” கச்சாங்” தோல் கிடைத்த கதைதான்.

தமிழ் ஈழம் /இலங்கை தமிழர்கள் என்றால் மலேசிய தமிழர்களிநூடான உறவு,உரிமை,பாசம், உடல் ,உயிர்,ஆவி ,கலை, கலாசாரம், பண்பாடு என  பல பதிவுகளை  செய்யலாம்.

இது மனித உளவியல் தொட்ட  5000 ஆண்டுகள் மரபணு சொந்தங்கள் என்று பொருள் படும்.. மத அடிப்பது உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் அளவிற்கு மனித நேய மரபணு உறவுக்கு பாதிப்காகும் ஒவ்வொரு இனமும் துடிக்கும் என்பது உலக இயல்பு.

ஒரு இனம் அரசியலில் அடிப்படும் போது கண்டும் காணமல் போகும் ஒரு நாட்டின் தலைவரை எந்த இனமும் ஏற்காது என்பதும் உலக உண்மை. இது நமது பிரதமருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் உலக கடமை,நாட்டின் பொறுப்பு என்று வரும் போது மிக நிதானமாக நமது பிரதமர் முடிவு எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பார் என்பதும் நமக்குப் புரிகிறது.

உலக வல்லரசு நாடுகளின் ஒன்றான இந்திய  பிரதமர் “இச்சோக” மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் அரசியல் நன்மைக்கும் நாட்டு தமிழர்களின் உணர்வுக்கு மதிபளித்து  செய்த அரச தந்திர முடிவு என்பது வெள்ளிட மலை.அதுபோல   நாட்டின் இன மான உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நஜீப் அவர்கள் சோகம் மாநாட்டுக்கு போவதை தவிர்த்தல், மலேசியத தமிழர்களின் மனங்களில் மகிழ்வை தரும் என்பதில் சந்தேகமில்லை.

இது அவரின் தலைமைத்துவ  அரசு அரசியல் மேலாண்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக அடுத்த தேர்தலுக்கு தமிழர்கள் வித்திட்ட வெற்றியாகவும்  பிரதமரின்  நம்பிக்கைக்கும் உரம் தரும் என்றும் நம்பலாம்.

தமிழ் ஈழம் பற்றி ம இ கா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இல்லை. ம இ கா  தேசிய தலைவர் அமைச்சர் டதோ ஸ்ரீ பழனிவேல் அவர்கள் சோக மாநாட்டின் பாதிப்பும்  மலேசிய தமிழர்களின் பரிதவிப்பு  நிலைப்பாட்டையும் உணர்த்தி இருப்பார் என்ற நம்பிக்கை நமக்குண்டு. ம இ காவின் நல்ல நிலைப்படும் அதுவாகததான் இருக்கும் இருக்க வேண்டும்.

அரசியல் அரசு உருமாற்றம் என்பது மனித நேய உறவின் உச்ச கட்ட திருப்தியில் அமையும் கௌரவமாகும்.இது நம் நாட்டை பொறுத்த வரையில் பல்லின வளப்பத்துக்கு பெரிதும் உதவும் அரசியல் உகதியாகும்.

தமிழீழ தமிழர்கள் மீது ஸ்ரீ லங்கா அரசாங்கம் செய்த கொடூரம் உலகம் அறியும். சோகம் மாநாட்டில் கலந்து கொள்வதால் மலேசியாவுக்கு ஏற்படபோகும் நன்மையைவிட அவதூறுதான் அதிகம் என்பதை நான் உணர்த்த தேவை இல்லை.

தமிழீழம் ,இலங்கை மீதான அவப்பெயர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகம் கவனித்து வந்த கொடூரம் இந்த சோகம் மாநாட்டில் ஒரு முடிவை தரும் என்பதால் பாதகமான முடிவில் நம் நாடு தலையிடாமல் தவிர்ப்பது ஒரு சிறந்த அரசியல் அரசு முடிவாக இருக்கும்.இதனால் ம இ கா தலைவர்கள் தமிழர்கள் மத்தியில் தலை நிமிர்த்து அடுத்த கட்ட அரசியல் வெற்றிக்கு வித்திட விமோசனம் கிடைக்கும் என்றும் பிரார்த்திக்கிறோம்.அனைத்தும் நம் பிரதமர் கையில் நம் நம்பிக்கை மிளிரட்டும் என்று உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்க இயக்குனர் பொன்  ரங்கன்  தமது அறிக்கையில் தெரிவித்துக்கொள்கிறார்.