செர்டாங் மருத்துவமனையில், 2011-இலிருந்து 7-தடவை கூரை இடிந்துவிழும் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரும்கூட அந்தத் தரக்குறைவான வேலைக்குப் பொறுப்பான குத்தகையாளர் யார் என்பதை அரசாங்கம் வெளியிடாதிருக்கிறது.
அதற்காக அரசாங்கத்தைக் கண்டித்த டிஏபி கூலாய் எம்பி தியோ நை சிங், அவரது பெயரை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் எஸ்.சுப்ரமணியம் சுகாதார அமைச்சரான பின்னர் நான்காவது தடவையாக இப்படி நிகழ்ந்திருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குத்தகையாளர் யார்? வேற யாரு அன்வார்தான் !!அப்படிதான் அம்னோ காரனுங்க சொல்லுவானுங்க
கிண்டிப் பாத்தா பெரிய பெரிய முதலைஎல்லம் வெளியே வரும். அதனால் தான் அம்னோ காரனுங்க வாயை போத்திக்கிட்டு இருக்கனுன்ங்க.
குத்தகையாளர் இன்னாரும் பிரேசில் போய் சம்பா,சல்சான்னு ஆடி கொண்டிருப்பார்.இனி இந்த பக்கம் திரும்பி வர மாட்டார்!
வேறெ யாரு பூமிபுத்ரா CONTRACTOR தான்….