இஸ்ரேலில் 130 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்புயலின் விளைவாக வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெருசலேம் செல்லும் 2 நெடுஞ்சாலைகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகள் தலைநகர் ஜெருசலேமில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
ஜெருசலேம் உள்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
பொது போக்குவரத்து மற்றும் உள்ளூர் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க நேரிட்டுள்ளது. வனிக வளாகங்களும் மூடிக் கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்படைந்துள்ளது.
ஈழ தமிழனை பணத்திற்காக கொன்று குவித்த இவர்களுக்கு இனி நரகம்தான் மிஞ்சும்!!!
இஸ்ரேல் இக்கு இன்னும் நிறைய அழிவுகள் காத்து இருக்கின்றது. நாம் சீக்கரம் பார்போம் அணைத்து அழிவுகளையும்.