இலங்கையில் 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகி நிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார்.
13-ம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகள் தலைமையிலான அரசாங்கங்களும் (ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் உட்பட) இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13-ம் திருத்தத்துக்கும் அப்பால் சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட நிறைவுரையை ஆற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிநாட்டிடம் தீர்வு தேடாமல் உள்நாட்டிலேயே தீர்வொன்றை எட்ட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா, அதுபற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? என்று பிபிசி கேள்வி எழுப்பிய போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளூரிலேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம் என்றார் சம்பந்தன்.
பேச்சுவார்த்தை முறிவுக்கு அரசாங்கமே பொறுப்பு
ஓராண்டுக்கும் மேலதிகமாக அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதன் போது தாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தன் கூறினார்.
பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2012-ம் ஆண்டு ஜனவரி 17, 18, 19-ம் திகதிகளில் இடம்பெற இருந்த பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சமூகமளிக்காதபடியாலேயே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதில் இடம்பெறுமாறு அரசாங்கம் தமக்கு விடுத்த அழைப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.
13-ம் திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
ஒரு நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.
காலங்காலமாக ஈழத்தமிழர்களின் நிலை வலுப்படும் போதெல்லாம் சிங்களவன் குள்ள நரி தந்திரமாக பிரச்சனையை நாமே பேசி தீர்வு காணலாம் என்று பிரச்சனையை மழுங்கச் செயிதுவிடுவான் !இப்போதிய சூழ்னிலையில் கூட்டமைப்பு பிரிட்டன் முன்மொழியும் நிரந்தர தீர்வை நோக்கி வியூகம் அமைத்து காய் நகர்த்தப்பட வேண்டும் !விடுதலை புலிகள் பல முறை பேச்சுவார்த்தை,ஒப்பந்தங்கள் செயிதும் குப்பையில் போட்டவன்,சிங்கவன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கக் காரணம் இலங்கைக்கு எதிரான அனைத்துலக தலைவர்களின் அழுத்தம் !
எல்லாம் தமிழ்நாட்டின் அரசுகளின் சுயனலத்தினால்தான் –எப்பொழுதே இதைப்பற்றி முடிவேடுத்திருக்கவேண்டும். அதிலும் புது டில்லியில் உள்ள அரசை நம்பவே முடியாது. தமிழர்கள் செத்தால் இவனுக்கென்ன
தமிழ் துரோகிகள்இன்னும் பலர் — என்ன சொல்வது.