இராக்கின் தலைநகர் பாக்தாதில் கிறிஸ்த்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முதலாவது குண்டுத் தாக்குதல் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டு பக்தர்கள் ஒரு தேவாலயத்தைவிட்டு வெளியே வரும்போது நடைபெற்றது.
அதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது குண்டு, பெரும்பாலும் கிறிஸ்த்தவர்கள் வசிக்கும் ஒரு பகுதிக்கு அருகிலுள்ள ஒரு திறந்தவெளிச் சந்தையில் வெடித்துச் சிதறியது.
இராக்கில் இப்படியானத் தாக்குதல்கள் தொடருகின்றன.
இந்த இரண்டுத் தாக்குதல்களிலும் 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
எனினும் இதுவரை இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இராக்கில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவ சமூகத்தை இலக்கு வைத்து அல் கயீதாவும் இஸ்லாமியத் தீவிரவாதிகளும் கடந்த காலங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. -BBC