சிலாங்கூர் அம்னோ “அல்லா” எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையை மீறியது

 

UMNO-Allah Protest1கிறிஸ்துவர்கள் “அல்லா” என்ற சொல்லை பயன் படுத்துவதை எதிர்க்கும் ஆர்பாட்டத்தில் கட்சி உத்தரவையும் மீறி இன்று சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்கள் கிள்ளானில் பங்கேற்றனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச்சின் முன்பு நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிரான கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு திடலுக்கு மாற்றப்பட்டது.

சுமார் 100 கெராக்கான் மஸ்ரகாட் பிரிஹாத்தின், ஜாட்டி, இஸ்மா மற்றும் பெகிடா மெருடிவிசன் ஆகியவற்றின் உறுப்பினர்களோடு அம்னோ சிலாங்கூர் உறுப்பினர்கள் சுல்தான் சுலைமான் கிளப் திடலில் கூடினர்.

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு எதிராக எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று  அம்னோ சிலாங்கூர் தலைவர் நோ ஒமார் அவரது உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு தடைவித்தார்.

இதனிடையே, இன்று தேவாலயத்தில் நடந்த பிராத்தனைக்கு எவ்விதத் தடங்களும் ஏற்படவில்லை.

முற்போக்கு முஸ்லிம்கள், மரினா மகாதிர் உட்பட, தேவாலயத்திற்கு வெளியில் மலர் ஏந்தி நின்று கிறிஸ்துவ சகோதரர்களுக்கு தங்களுடைய ஒருமைப்பாட்டை தெரிவித்தனர்.

 

 

 

TAGS: