தெற்குசுடானின் ”போர்” நகருக்கு வெளியே நடந்த கடுமையான சண்டையில் ஒரு இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டிருக்கிறார்.
அந்த நகருக்கு கூடுதலாக அனுப்பப்பட்ட வாகனத் தொடரணி ஒரு இடத்தில் வழிமறித்து கடுமையாக தாக்கப்பட்டதாக, அங்கு முன்னேறிக்கொண்டிருக்கும் அரசாங்கப் படைகளுடன் இருக்கும் ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை அதிபரான ரெய்க் மச்சார் அவர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிக்காரர்களின் வசம் Bor நகர் இருக்கிறது.
அந்த வீதி நெடுகிலும், இறந்த சடலங்களையும், எரிந்துபோன யுத்த தாங்கிகளையும் பார்த்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
3 வாரமாகத் தொடரும் சண்டையை முடிவுக்கு கொண்டுவருமுகமாக மோதலில் ஈடுபடும் இரு தரப்பும், எத்தியோப்பிய தலைநகர் அட்டிஸ் அபபாவில் நேரடி பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன. -BBC
தென் சுடானில் நிலைமை ரொம்ப சூடா இருக்கு…….