வடக்கு மாகாணசபை அமர்வுகளில் இதுவரை நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானங்களுக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் இதுவரை பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக நடத்தப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சபையை பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
இதுவரை வரவு செலவுக் கூட்டத் தொடர் உள்ளிட்ட மூன்று கூட்டத் தொடர்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று கூட்டத் தொடர்களிலும் பல்வேறு உறுப்பினர்களாலும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய திணைக்களங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு திணைக்களத்தினாலும் மாகாணசபைக்குப் பதில் வழங்கப்படவில்லை.
பாடசாலைகளிலிருந்து இராணுவ வெளியேற்றம், சிவில் ஆளுநர் நியமனம் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப் பட்டது தான். அவ்வளவு எளிதில் சிங்களவன் தனது பிடியை விட்டுவிடுவானா! நல்லதையே எதிர்பார்ப்போம்!