சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி டாலர்கள்) என்ற நிலையை எட்டியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடவில்லை.
அமெரிக்கா கடந்த 2013 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுக்கான தனது புள்ளிவிபரங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் ஏற்றுமதி இறுக்குமதி 3.5 டிரில்லயன் என்ற அளவில் இருந்தது.
ஒரு பில்லியன் என்பது 100 கோடி. 1000 பில்லியன்கள் சேர்ந்தது ஒரு டிரில்லியனாகும்.
சீனப் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்து சில ஐயப்பாடுகள் இருந்தாலும், சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டாலும், உலக வர்த்தகத்தில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது என்பது மாறாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்