அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானியின் இல்லத்தில் வேலை பார்த்தபோது மிகவும் சிரமத்துக்குள்ளானதாக அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு குறை கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சங்கீதா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில், இது பற்றி முதல் முறையாக அவர் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது குடும்பத்துக்கு பணம் அனுப்புவதற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வர முடிவு செய்தேன்.
ஆனால், இங்கு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நான் நினைக்கவில்லை. அதாவது, தேவயானியின் வீட்டில் நான் ஏராளமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் எனக்கு தூங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ, என் பணிகளைக் கவனிப்பதற்கோ கூட நேரம் இருந்ததில்லை.
தேவயானியின் வீட்டில் பணியாற்றியபோது அவர்கள் என்னை நடத்திய விதம் காரணமாக, இந்தியாவுக்குத் திரும்பிவிட முயன்றேன். ஆனால் நான் இந்தியா திரும்புவதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
நான் பட்ட வேதனையைப் போலவே அமெரிக்காவில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் மற்ற வீட்டு வேலைக்காரர்களுக்கும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். “உங்களுக்கு என்று உரிமைகள் உண்டு. உங்களைச் சுரண்ட யாரையும் அனுமதிக்காதீர்கள்’ என்பதுதான் அது என்று அறிக்கையில் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அவருக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வாதாடி வரும் “சேஃப் ஹாரிஸன்’ என்ற அமைப்பு இந்த அறிக்கையை சங்கீதா சார்பில் வெளியிட்டது. துணைத் தூதர் தேவயானி மீதான குற்றப்பதிவை அந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
கொக்கு என்று எண்ணினையோ தேவயானி? மனிதனை மனிதன் மதிக்கா விடில் ஆண்டவன் இது போன்று பாடங்கள் புகுட்டுவான் அவ்வப்போது ………
மனிதாபமில்லா குற்றம் புரிந்த ஒரு தூதரக அதிகாரி தண்டனையை அனுபவிப்பதில் இருந்து தப்பிவிட்டார். இந்தியாபோல் அல்லாமல் சட்டத்தை முறையுடன் அமல் செய்யும் USம் இதில் தோல்விகண்டது. குற்றம் பதிவு பெற்றது; தண்டனை அமல் இல்லை. தண்டனையில் இருந்து தப்பிக்க இந்தியா இந்த அம்மையாரை உடனே விரைந்து தூதரக immunity உள்ள உயர்நிலைக்கு UNகு மாற்றம் செய்ததால்..! குற்றம் புரிந்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு எப்பொழுதுமே அவ்வளவு அக்கறைக் கிடையாது. அதனால்தான் பெரும்2 திருடர்கள் எல்லாம் பாமர, ஏழை மக்களின் பெரும்3 கோடிஸ்வர தலைவர்களாக உள்ளனர் அங்கு.
இதைத்தானம்மா ஒரு கண்ணில் நல்லெண்ணையும் இன்னொரு கண்ணில் வெலக்கென்னையும் ஊத்துவதாக சொல்வது..?
இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை ,,என்ன செய்வது
The hell with indian rotten government policies,God is watching us from a distance!
bravo! sangeetha richard………….