இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85.
அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார்.
சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் அண்மைய நாட்களாக அவரது நிலை மோசமடைந்தது.
இஸ்ரேலிய வரலாற்றில் ஏரியல் ஷரோனுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
இராணுவ ஜெனரலாக இருந்தவர், பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மாறினார்.
எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஏரியல் ஷரோன் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -BBC