உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது.
இரண்டாவது நபராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மூன்றாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனும் உள்ளனர்.
அவர்களுக்கு அடுத்த இடத்தை தான் பாப்பரசர் பிரான்சிஸ் பிடித்திருக்கிறார்.
அமெரிக்காவிலோ ஒபாமாவை விட இரண்டு மடங்கு ஆதரவுபெற்று, பாப்பரசர் பிரான்சிஸ் தான் முதலிடம் பெற்றார்.
சீனாவில் அதிபர் க்ஷி ஜின்பிங்-ஐவிட இரண்டு மடங்கு விருப்பு வாக்கு பில் கேட்ஸுக்கு கிடைத்திருக்கிறது.
டைம்ஸ் செய்திப் பத்திரிகைக்காக ஆய்வு நிறுவனமொன்றினால் 13 நாடுகளில் சுமார் 14 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஓரு மாதத்துக்கு முன்னர் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தால் நெல்சன் மண்டேலாவே முதலிடம் பெற்றிருப்பார் என்று குறித்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.