வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் இனப்படுகொலை நிகழ்வதற்கான வாய்ப்புக்ள் அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் ஆடமா டைங் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆடமா டைங், இங்கு வாழும் இரு பிரிவினர் இடையே நிலவும் வெறுப்புணர்வு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெறுப்புணர்வை நீக்காமல் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது சாத்தியமற்றது என்று எச்சரித்துள்ளார்.
மேலும் நாட்டின் பல இடங்களில் கிராமங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம், ஒழுங்கு மிகமோசனமானநிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மத்திய ஆப்ரிக்க குடியரசில் இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேத்தரின் சம்பா பான்ஸா ஆயுத குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார்.