மைக்கேல் ஷூமேக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக பிரான்ஸ் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கார்பந்தய போட்டியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வெற்றியை நிலை நாட்டியவர் ஜேர்மனியை சேர்ந்த மைக்கேல் ஷூமேக்கர்(வயது 44).
கடந்தாண்டு நவம்பர் 29ம் திகதி, ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததால், ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹெலிகாப்டரின் மூலம் கிரீனோபிலில் உள்ள மருத்துவமனையில் 24 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷூமேக்கர் குணமடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஷூமேக்கரின் உடலில் சிறு அசைவுகள் தென்பட்டதாக, பிரான்ஸ் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை ஷூமேக்கரின் உதவியாளர் மறுக்கவோ, உறுதி செய்யவோ மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.