ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிக்க பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
அமெரிக்க பிரேரணைக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட பிரதிநிதியாக பல்வேறு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிரேரணை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவு வழங்க பல நாடுகள் தயாராகவுள்ளன. எனினும் பல நாடுகள் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.
போகும்போது பை நிறைய பணமும் கொண்டு போயி இருப்பீங்க…! உங்க கதை இப்படி இருக்கு: ஒரு காமுகன் ஒரு பெண்ணை மானபங்கம் செய்து கற்பழித்து கொடூரமாகக் கொலை செய்கிறான். ஊர்ப் பெரியார்கள் சிலர் கூடி அவனின் குற்றம் உர்ஜிதம் ஆக முயற்சிக்கின்றனர். ஆனால், தன்னை மிக ஒழுக்கசீலன் எனக் கூறிக்கொள்ளும் அந்தக் காமுகன் தனக்கு நெருக்கமானவர்கள் வீட்டிற்கு இரவோடு இரவாக சென்று மறுநாள் பஞ்சாயத்தில் தன்னை நிரபராதி என கூற வேண்டும் என கெஞ்சுகிறான். அதில் சில கேடுகெட்டதுகள், “சரி2, கவலைப்படாதே. நாளை அப்படியே செய்கிறோம். நாம் நெருங்கிய நண்பர்களாயிற்றே”, என ஆறுதல் கூறி மறுநாள் சொன்னபடியே செய்கின்றனர். சத்தியம் காக்கும் உத்தமர்கள் அல்லவா..?! இலங்கை நிலையும் அந்த “உத்தம” காமுகன் நிலைதான். அதையும் ஆதரிக்க சில நாடுகள். !!! இந்தியாவும் சேர்ந்துதான்…. ஆனால் இரகசியமாக…, ஜப்பானை செய்ய சொன்னதுபோல.