யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு பயணம்

யாழ்ப்பாணத்தை பயணம் செய்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாண அரசாங்க அதிகாரி திருமதி இமெல்டா சுகுமாரைச் சந்தித்து யாழ்ப்பாணத்தின் சமகால நிலைமைகள் பற்றியும் அது தொடர்பான நிலைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட போரின் பின் தமிழ் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களை நேரில் அறிவதற்காக இந்த நாடாளுமன்றக் குழுவினரின் பயணம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த குழுவினர் யாழ்.கோட்டை, யாழில் உள்ள உல்லாச மையங்கள், பிரசித்தி பெற்ற ஆலயங்கள் என்பவற்றுக்கும் பயணம் செய்திருந்தனர்.

ஜக்கிய அமெரிக்க பாராளுமன்றக் குழுவினரான கெட் சலர், வன் சான்சலர், ஜக் குயின்ரன்ஸ் ஆகியோர் உட்பட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோரும் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.