ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 12 பலி

Heavy snowfall in Japanஜப்பானில் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு 12 பேர் பலியானதாகவும் 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜப்பானில் பனிப்புயல் காரணமாக ரயில் விமானம் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.