இந்திய சமூகத்திற்கு அப்பட்டமான நம்பிக்கை துரோகம் இழைத்ததற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நஜிப்பிடம் மலேசிய இண்ட்ராப் மன்றத்தின் (பிஎச்எசம்) பி.வேதமூர்த்தி கூறினார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தமது செனட்டர் மற்றும் துணை அமைச்சர் பதவியை விட்டு விலகிய வேதமூர்த்தி இன்று சுமார் 20 நிமிடங்களுக்கு நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய சமூகத்திற்கு துரோகம் இழைத்த நஜிப் அப்துல் ரசாக் ஒரு பொய்யர் என்றும் கூறினார்.
“இதை (நம்பிக்கை துரோகத்தை) செய்ததால், அவர் (நஜிப்) அனைத்து இந்திய மக்களுக்கும் வரலாற்று அளவில் நம்பிக்கை துரோகச் செயலை புரிந்துள்ளார்.
“பல தலைமுறை வரைக்கும் இதனை மறக்க இயலாது. இக்கதை மீண்டும் மீண்டும் கூறப்படும்”, என்று வேதமூர்த்தி விசனப்பட்டுக் கொண்டார்.
பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வேதமூர்த்தி அவரது அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளை ஏற்க மறுத்து விட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
கடந்த ஆண்டில் மே 5 ஆம் தேதி நடைபெற்ற 13 ஆவது பொதுத் தேர்தல் நடப்பதற்கு ஐந்தே நாள்களுக்கு முன்பு பாரிசான் நேசனலுடன் சர்ச்சைக்குள்ளான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்ட வேதமூர்த்தி கடந்த திங்கள்கிழமை அவரது செனட்டர் மற்றும் துணை அமைச்சர் பதவிகளைத் துறந்தார்.
ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியர்களை பாரிசானுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 13 ஆவது தேர்தலுக்குப் பின்னர் செனட்டராகவும் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட அவர் இந்தியர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்பார் என்ற தோற்றம் அளிக்கப்பட்டது.
ஆனால், அவர் எழுப்பிய போலீஸ் காவலில் மரணம் போன்ற சில பிரச்சனைகள் காரணமாக அவர் பதவி விலக வேண்டுமென்று உள்துறை அமைச்சர் அஹமட் ஹமிடி, இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கரி ஜமாலுடின் மற்றும் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுஸ்சின் போன்ற சிலர் கேட்டுக் கொண்டனர்.
வேதமூர்த்தி அரசாங்க செயல்பாடுகளுடன் ஒத்துப் போக வேண்டும் என்று பிரதமர் நஜிப்பும் கூறியிருந்தார்.
“நம்பிக்கையை குலைக்கும் முடிவு”
வேதமூர்த்தியின் பதவி விலகல் குறித்து கருத்துரைத்த நஜிப், அவரது முடிவு நம்பிக்கையை குலைப்பதாகும் என்று வர்ணித்ததோடு அவர்கள் அது குறித்து பேசி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த வேதமூர்த்தி தாங்கள் பல தடவைகளில் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். ஆகவே, நஜிப் மலேசியர்களிடம் மேலும் பொய் சொல்கிறார் என்று வேதமூர்த்தி கூறினார்.
“கடந்த எட்டு மாதங்களில், நான் பிரதமரோடு அவரது புத்ராஜெயா அலுவலகத்தில் குறைந்தது16 கூட்டங்களை நடத்தியுள்ளேன்.
“இந்த கூட்டங்கள் ஒவ்வொன்றிலும், தாம் தலைமை ஏற்க விருப்பதாக அவர் உறுதியளித்த இப்புதிய பிரிவுக்கு பெயரிடுவதோடு ஒப்புக்கொள்ளப்பட்ட பட்ஜெட் குறித்தும் வலியுறுத்தி வந்தேன்”, என்று வேதமூர்த்தி விளக்கம் அளித்தார்.
மேலும், “தீர்மானங்கள் எடுப்பதற்கான அரசியல் திண்மை மற்றும் ஒப்புகொள்ளப்பட்டவற்றை அமலாக்கம் செய்வதற்கு அவரது அரசு ஊழியகளுக்கு அழுத்தம் கொடுக்க இயலாத” ஒரு பலவீனமான தலைவர் என்று நஜிப்பை அவர் கடுமையாக விமர்சித்தார்.
நஜிப் அம்னோவை நம்பினால் இறுதியில் நாமம்தான் என்று சொன்ன போது வேதாவும் அவரது சகாக்களும் வாய் ஜாலம்தன்னெ
பேசினார்கள்….கண் கெட்டப் பின்னர் சூரிய வணக்கம் தேவையா
……..
அப்போவே சொன்னோமே வேதா. கேட்டிங்களா?????
..ப்ளூ பிரிண்ட் …என்னாசு பாங்….???இது எல்லாம் ஒரு பொலப்பா????????தேவையா இப்படி ஒரு அவமானம் ???
SAMUTHAYITHIN UNMAYANA ETHIRI SAMYVELU AND MAHATHIR UNMAYANA TROGHI WAYTHA AND UTHAYA BECOZ AT THE LAST MINUTE OF GE 2013 WAYTHA AND UTHAYA BETRAYED TE PAKATAN AND INDIANS!
அரசியல் ரீதியாக பார்கலாமே,அன்வர் என்ன செய்தான் ஒப்பந்தங்களை புரக்கணித்தான்,ஹின்ராப் போறாட்டம் செய்யும் போது கூட சேர்ந்து ஜால்ரா போட்டு நம்மவர்களை அவன் பக்கம் இழுத்துக் கொண்டான்.நாம் ஹண்ராப்,சமயம் வரும்போது நம் தேவைகளை பேரம் பேசி வாங்கி இருக்கலாம்.நமக்கு எந்த கட்சியும் தேவை இல்லை அப்படி இருந்திறுந்தால் எந்த சூழ்ச்சியும் நம் பக்கமே வந்திருக்காது.யார் ஆட்சி செய்தாளும் நம் கதி விதி மாராது.அன்வர் கிருஸ்துவர்களை நம்பிதான் ஆகவேண்டுய கட்டாயம்.மலாய்காரன்,சபா,சரவா,சீனர் ஆக கடைசியாக நாம் நிட்போம்.மக்கட் தொகயை பெருக்க யாறும் தயாரில்லை,ஆகையால் நமக்கு கிடைக்கும் சலுகை இப்போதை விட மிக குரைவாகவே பெருவோம்.இது கற்பனை அல்ல கணக்கு,பிள்ளைகலை திடவில் விலையாடவிட்டு ஒதுங்கி நின்று பெறறோரகள் கண்கானிக்க வேணும்.நாராயண சமர்பணம்.
இதை விட முட்டாள் தனம் வேறு ஏதுமில்லை. அவன் அள்ளிவிட்டதை நம்பி போனது யார்?
இப்போது அவனை பதவி துறக்க சொன்னால் அவன் செய்வானா? இந்த பதவியில் இருக்கவே அவன் அவ்வளவு அள்ளி விட்டான்.அவனுக்கு வேண்டியது கிடைத்து விட்டது இப்போது ஏன் அவன் பதவி துறக்கவேண்டும்?
அவன் கட்சி அவ்வளவு நியாயமான கட்சியா?
யார் முட்டாள் என்று உறுதி படுத்தவும்
கோடாலியைத் தன் காலிலே போட்டுக் கொண்டு இப்பொழுது குத்துகிறது குடைகிறது என்றால் என்ன செய்வது!!!!!!!!!!!
எங்கே ஐயா கடுமையாக விமரிசித்தார்? வெண் சாமரம் அல்லவா வீசி விட்டுப் போயிருக்கின்றார்! “You must hold the bull by its horn” என்று சொல்வது போல் எதிரியை எதிர்த்து நிற்க தில்லு வேண்டும். அது உதயகுமாரிடம் இருந்தது. உம்மிடம் இல்லையே, என் செய்வேன்!
இன்னும் 4 ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு வேலை வெட்டியைவிட்டு விட்டு அவல் அறைக்க isu கிடைத்துவிட்டது. போதுமையா போதும் உங்கள் அரசியல். எங்களை அமைதியா வாழ விடுங்கள். தேர்தல் வரும் போது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒரு சின்ன மைனாரிட்டி சமூகத்தை மேலும் கூறு போட்டு சிதைக்காதீர்கள். நம் தமிழ் இதழ்கள் இனிமேலும் இவர்களுடைய அற்ப செய்திகளை வெளியிடக்கூடாது. நாம் போராடி வாங்கிக் கொடுத்த வெற்றிகள் போதும். அதனால் இந்த 6 ஆண்டுகளீல் நாம் பெற்ற இமாலய மேம்பாடுகள் போதும். துணை முதல்வர் பினாங்கில் 6 ஆண்டுகளில் 6 பேருக்கு மாநில அரசில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். 6 பேருக்கு வர்த்தக் பெரிமிட் கொடுத்துள்ளார் என்ற செய்தி எப்போதாவது வந்துள்ளதா? மத்திய அரசாங்க செலவில் இயங்க வேண்டிய தமிழ்ப்பள்ளிக்களுக்கு மானியத்தையும் ஆகம முறையாக செயல்படாத கோயில்களுக்கும் மானியம் கொடுத்தும் மக்களை முட்டாளக்கும் சாதனைகள் தான் நாம் எதிர்பார்த்த வெற்றியா? சிந்திக்காத சமூகமும் சுயநல தலைவர்களும் கண்மூடி தொண்டர்களும் இருக்கும் வரை ந்மக்கு நாமம்தான்.
நீயும் ஒரு சமுதாய துரோகி, அதை மறந்துவிடாதே
இந்த விஷயத்தில் ம இ கா தான் சரி எவனுக்கு என்ன கிடைக்குதொ,இல்லையோ அதை பற்றி எல்லாம் எவனுக்கும் கவலை இல்லை ,அவர்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்து வருவதால் ஜால்ரா அடித்து ஐம்பது வருடத்திற்கு மேலாகவும் குப்பைக்கூட்டி வருகிறனர்,…………………………………..என்ன 13வது பொது தேர்தலில் umno விற்கு சமாதி கட்டியிருக்கலாம்,இந்த நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டாரே வேதமூர்த்தி,காலம் கடந்து விட்டதால் நஜிப் வேதாவிற்கு சமாதி கட்டிவிடுவார்,என்றென்றும் நினைவில் நிற்க வேண்டியது c4 .
WYTHAA ,AVARGALE NEENGAL SEITHATHU SARI NAANE UNARUGIREN ,,INTHA MAATHIRIYAANA RAAJINAMAA VELAIGALLELLAAM SEENARGAL THAAN SEIVAARGAL ,,AANAAL THAIRIYAMAAGA ,TUNICHALAAGA PATHAVI VILIGIYA UNGGALUKKU NANDRI . THO ORUTHAN KUTHU VAANGGIDDU SOODU SORANAI ILLAAMAL AMNO KAARAAN KAALAI NAKKIKIDDU IRUKAAN !!ENNAATHE SOLVATHU INTHA KAMAHASANAI ….!?
உள்ளே இருந்து ஒன்னும் செய்ய முடியவில்லை. வெளியே வந்து
கூவுவதால் என்ன பயன்?
அறவழியில் உருதியானவனாகவும்,பொருள் வகையில் நாணயமானவனாகவும்,இனபம் தேடி மயங்காதவனாகவும்,தன்னுயிர்க்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.501.
கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இந்தியர்களின் மானத்தையும் இந்த நாதாரி கெடுக்க பாக்கிறது……..மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகி இந்த சமுதாயம் மேலும் கீழ் நிலைக்கு செல்லப் போகிறது…….இந்த மானங்கெட்ட வேதா போராடியது போதும் ……வீட்டில் அடங்கி உட்காருங்கள்…….உங்களின் இந்திய சமுதாய அக்கறையை குப்பைதொட்டியில் போடுங்கள்…………………….
சரி வேதா , நஜிப்பை பதவி விலக சொல்வோம் ,அவருக்கு பதிலாக யாரு வந்த இந்தியர் பிரச்சனை தீரும் ,13வது தேர்தலில் உன் பேச்சை கேட்டு பி என் கட்சிக்கு ஒட்டு போட்டோம் , இப்போது அவன் மோசடி செய்து விட்டான் என்கிறாய் , அன்வார் பிரதமராக வந்தால் இந்தியர்களின் பிரச்னைகள் தீர்ந்து விடுமா ,எவன் வந்தாலும் இந்தியர்களின் பிரச்னை தீர் போவது இல்லை , காரணம்
இந்தியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ம.இ.கா வினர் அபேஸ் பண்ணுகிறான் ,முதலில் ம.இ.காவை பி என்னிலிருந்து வெளியேறி இந்தியர்கள் அனைவரும் ஒரே எதிர் குடையின் கீழ் இணைத்து செயல்பட சொல் முடியுமா உன்னால் நைனா .
SAMARASAM
உன்னை நம்பி, அரசியலில் என்னினத்தவரிடம் வாயாடியது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்கின்றேன். பிரதமர்ந டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில் தான் இந்தியர்களுக்கு சில சலுகை கிடைக்கின்றது என்பதை மனசாட்சியோடு கூறுகின்றேன். கூலிக்கு தக்கபடி எழுதவில்லை. நிகழ்கால நடப்புகளைச் சேகரி எழுதுகின்றேன்.
ஐயா வேதா அவர்களே! உங்கள் பதவிகளைத் துறந்து உங்களுக்கும் தன்மான உணர்வும் ரோஷமும் இருக்கின்றதென்பதை நிரூபித்துள்ளீர்கள், வாழ்த்துகள் !!!!!!!!!! ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் உயர்வுக்கு மட்டும் பாடுபடப்போகிறேன் எனும் காலத்திற்கு ஒவ்வாதத் தங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள். HINDRAF ஒரு தோல்வி என்பதற்கு ISA வில் அடைக்கப்பட்ட 5 தலைவர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையே நல்ல எடுத்துக்காட்டு. ஆகவே, ஒடுக்கப்பட்ட மலேசியர்களுக்காகப் போராடுங்கள். அதி இந்தியர்களின் நலனும் அடங்கியுள்ளது. அதற்கு பாக்காத்தானே சரியான தேர்வு !!!! முடிவு செய்யுங்கள்.
இதில் சீனன்தான் கெட்டிகாரன். இன்று வரை அமைச்சர் பதவி
எடுக்கவே இல்லை. வேதா அவர்களே உங்கள் வாயை அடக்க
அம்னோ கொடுத்த பதவியே அது. மந்திரி பதவி கிடைத்ததும்
உப்பு கொஞ்சம் கூட சாப்பிட்ட மாதிரி தெரியுது.நன்றி !
கடந்த 56 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களை முட்டாளாக்கிய கட்சி ம.இ.கா. எல்லா பிரச்சனைகளையும் நான் பிரதமரிடம் சொல்லி இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மக்களை ஏமாற்றியவர் 29 ஆண்டுகளாக தலைவராக இருந்த சாதனைத் தலைவர் சாமிவேலு. மலேசியர்களை “பிலான் பண்ணி” பிரித்தவர் 22 ஆண்டு அம்னோ தலைவர் மகா தீரர் . உரிமைக்கும் சலுகைக்கும் உள்ள வேறுபாட்டினை நமக்கு உணர்த்தியவர் வேத மூத்தி அவர்கள்.இண்ட்ராப் இயக்கத்தின் தலைவராக இருந்து தே,மு.யுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது அவர் சுயநலத்திற்காக அல்ல. மக்கள் பொது நலத்திற்காக. நம் தயவால் ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த மக்கள் கூட்டணி நமக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த தேர்தலுக்கு முன் பல முறை கலந்து பேசியும் நமக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்த தே.மு. இண்ட்ராப்பின் ஆதரவை நாடியது. 12 தேர்தலில் நாம் இனாமாக நம் வாக்குகளை அள்ளித் தந்தோம். ஆனால் இம்முறை அப்படி இல்லாமல் உரிமைகளை எழுத்துப் பூர்வமாக இண்ட்ராப் தே.மு.யிடம் சமர்ப்பித்தது. அதுவே நாம் செய்துக் கொண்ட ஒப்பந்தம். ஆனால் அந்த ஒப்பந்தம் “திரு.நம்பிகை” அவர்கள் அரங்கேற்றிய ஒரு மேடை நாடகம் என்று 8 மாதங்களுக்குப் பிறகுதான் இண்ட்ராப் அறிந்துக் கொண்டது. 56 ஆண்டுகளாக மேடை நாடகம் அரங்கேற்றி வரும் ம.இ.கா.வை யாரும் கண்டு கொள்ளவில்லை. மக்களுக்காக பதவி ஏற்று பிறகு பதவி துறந்த உண்மை சேவையாளனை தூற்றுவதற்குப் பலர் காத்துக் கொண்டிருக்கிறனர். ” காய்த்த மரம் தான் கல்லடிப்படும்”. “என் கடன் பணி செய்துக் கிடப்பதே” என்று தொடருங்கள் வேதா!
உண்மை எது
பொயெதுன்னு
ஒன்னும் புரியல நம்ம
கண்ணா நம்மால நம்ப முடியல
இந்த உலகத்துல யாரைத்தான் நம்புறதுன்னு
தெரியல. உண்மையில் அரசியல் ஒரு சாக்கடைதானொ என்று
எண்ணத் ஹொனுகிரது. ஆண்டவனுக்கே
வெளிச்சம்
. போரித்திருந்து பாப்போம். உண்மை ஒருநாள் நிச்சம் வெளி வந்தே தீரும்
. பொறுத்தவர் பூமியாள்வார்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே