நவநீதம்பிள்ளையை கண்டித்து இலங்கை அரசாங்கம் கடிதம் அனுப்பியுள்ளது!

navipilai14ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்துää இலங்கை அரசாங்கத்தின் சார்பில் முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகா அமைச்சின் செயலாளர் சேனுகா செனேவிரட்னவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தயாரித்து வழங்கியதாகää இலங்கை அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், தமது கடமையை செய்ய தவறி இருப்பதாக சேனுகா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: