ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் பணியகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமாவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படும் தேசிய பாதுகாப்புச்சபையின் பேச்சாளர் கைற்லின் ஹேடன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்,
“எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த, அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்கும்படி, சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரும், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனிதஉரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கிறது.
போரின் போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்கள், குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும், தொடர்ந்து மோசமடைந்து செல்லும் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கண்காணிக்கவும், கோரும், இந்தத் தீர்மானத்துடன் நாம் இணங்குகிறோம்.
இந்த தீர்மானம், சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்த மற்றும் உலகளாவிய உரிமை மறுப்பு பற்றிய கவலையையும், மற்றும் சிறிலங்கா மக்கள் அனைவரும் தமது விருப்பங்களை அடையக் கூடிய, ஒரு எதிர்காலத்தை உருவாக்க, முக்கியமான அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளது.
சிறலங்காவில் உள்ள எல்லா மக்களுக்கும் அமைதி, உறுதிப்பாடு, சுபீட்சம் என்பன கிடைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அனைத்துலக சமூகம் கடமைப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தி இந்த வாக்கெடுப்பின் மூலம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.
மாமனிதன் ….!
இந்தியாவில் மாக்கள் …!!
அடேய் ஒபாமா உன் காலத்தில் தான் 2009 கடைசி போர் நடந்தது. தமிழீழம் தனி நாடு வேண்டும் என்ற அதிக படி தமிழர்களின் 30 ஆண்டு கால தேவை உனக்கு தெரிந்தும் இப்போதும் “சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்த மற்றும் உலகளாவிய உரிமை மறுப்பு பற்றிய கவலையையும், மற்றும் சிறிலங்கா மக்கள் அனைவரும் தமது விருப்பங்களை அடையக் கூடிய, ஒரு எதிர்காலத்தை உருவாக்க, முக்கியமான அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளது. என்கிறாய்
இதுதான் உனது அரசியல் கோழைத்தனமா?
3லட்சம் தமிழர்களை ராஜபக்சே கொன்றதோடு தமிழ் இன படுகொலை செய்த இன வெறியன் கடைசியில் FREE FIRE ZONE லில் வைத்து உன் உதவியுடன் பிற நாட்டு துரோகம் உனக்கு விளங்க வில்லையா? எல்லாத்தையும் செய்து விட்டு தொட்டில் குழந்தையை ஆட்டும் உன் ஆட்ட்டமும் விரைவில் முடியும். தமிழர்களை கொல்வதில் ஒரு முஸ்லிமான உனக்கு ஆசை அதிகம்தான் என்பதும் எங்களுக்குத தெரியும் உலகம் உன்னை பார்க்கிறது. உனுக்கு இரண்டு கண்கள் மட்டுமே எங்களுக்கு உன் மேல் கோடி கண்கள்.காலம் வரும் உன் மனித உரிமை அநியாயம் உனக்கு பாடம் சொல்லும். நீ கொண்டுவந்த தீர்மானம் ஒரு பசப்பு விளையாட்டு உன தீர்மானத்தை எதிர்த்த நாடுகளுக்கு உன் கருத்தை நீ சொல்லவில்லை ஏன்?
உனக்கு அருகதையும் சக்தியும் இல்லையா? இதற்கு மேல் உன் சமாதான அறிக்கை ஒன்று வரும் இந்த உலகத தமிழர்களை ஆதரித்த நாடுகளை மீண்டும் ஏய்ப்பாய் !
yee