வட,கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் பெறுவதற்கான முனைப்புக்கள் உள்ளதாக இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதன்படி இரு மாகாணங்களிலும் இதுவரை 65 இளைஞர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கடந்த மாதத்தின் முற்பகுதியில் கிளிநொச்சி- தர்மபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான தேடுதல் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ் பேச்சாளர் மேற்படி தகவலை
வழங்கியிருக்கின்றார்.
அவர் வழங்கியிருக்கும் தகவலின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் ஒருங்கிணைவதற்கான ஏது நிலைகள் உருவாகியிருப்பதாகவும் அதற்கமைய 65 போர் கைது செய்யப்பட்டு, 5 போர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக படையினர் சுற்றிவளைப்பக்களும், சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக யாழ்.கோப்பாய் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அட்டுழியம் செய்வதற்கு ஒரு அளவு உண்டு.ஆனால் இங்கே மிதமிஞ்சி போச்சு.துரோக இந்தியா வாயை மூடிகிட்டு இருக்கிறது,தனி தமிழ் நாடு அமைப்போம் ஈழ மக்களை காப்பாற்றுவோம்.