அண்மைக்காலமாக மலேசிய விமான நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து பிரச்னைகளுக்கு உள்ளாவது ஏன் என ஆராயப்படும்.
“மலேசிய விமான நிறுவன விமானங்கள் தொடர்ச்சியாக தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்நோக்குவது ஏன் என்று விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம்” எனப் போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி கூறியதாக த ஸ்டார் கூறியுள்ளது.
நேற்றிரவு 10.09-க்கு, இந்தியாவின் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்ற எம்எச்192, தொழில்நுட்பப் பிரச்னையின் காரணமாக கேஎல் அனைத்துலக விமான நிலையத்துக்கே திரும்பி வந்தது.
இந்த எம்எச்192 சம்பவத்தில் சதித்திட்டம் இருக்கும் சாத்தியத்தையும் போலீசார் ஆராய்வார்கள்.
குப்பையில் கொட்ட வேண்டிய தகரடப்பா விமானங்களுக்கு விசாரணையா? ‘போத்தல்’ கடைக்காரரை கூப்பிட்டு அள்ளிக் கொண்டு போகச் சொல்லுங்கள்.
MH 370 சீன பயணம் ; MH 044 கொரியா பயணம் ; MH 192 இந்திய பயணம்
அடுத்து எந்த விமானமோ ??? எந்த நாட்டு பயணமோ ???
இந்த பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம் கூட கிடைக்காது. ஏனென்றால் அதை மறுசுலட்சி செய்து செய்யப்படும் உபரிகளும் தரமில்லாதவையாகத்தான் இருக்கும்.
அரைகுறையாகப் படித்தவனை எல்லாம் பதவியில் வைத்தால் இது தான் நடக்கும்.வேறு என்ன பெரிசா எதிர்பார்க்க முடியும்?
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லா பதவிகளும் மலாய் காரன்களுக்கே –ஒருகாலத்தில் தகுதியின் அடிப்படையில் பதவி கொடுக்கப்பட்டது ஆனால் 1981 பிறகு எல்லாம் தலைகீழ். காகாதிரின் மடத்தனத்தினால் எல்லாம் மலாய் மயமாகியது அதிலும் MIC MCA ஜால்ராக்கள் அவனுடன் சேர்ந்து கைகோத்ததின் விளைவு. நான் விமான பொறியியலாளன் 1965 ல் இருந்து என்ன நடந்தது என்று எனக்கு அதிகமாகவே தெரியும் — என்னைப்போன்றவர்களுக்கு அங்கு வேலை கிடைக்காது- நம்மவர்கள் ஒரு காலகட்டத்தில் உயர்பதவியில் இருந்தனர். காகாதிர் பதவிக்கு வந்த பின் எல்லாம் மாறியது– தகுதியும் தரமும் ஒரு பொருட்டே இல்லாமல் ஆகியது. மடையர்கள் அரைவேக்காடு இவர்களே பதவியில் அமர்த்தப்பட்டனர். விமானதுறையே தலை கீழ் ஆனது. நான் எதற்கும் விட்டு கொடுக்காததினால் நான் மட்டம் தட்டப்பட்டேன். இதற்கெல்லாம் நான் அசைந்து கொடுக்க வில்லை– நான் தற்போது வீட்டில் தான் இருக்கிறேன். இன்னும் எவ்வளவோ.
அம்நோவிற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்றால்,அவர்களின் அழிவுக்கு அறிகுறி.