கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் தனி சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்யும் பாஸின் முயற்சி குறித்து பக்காத்தான் ரக்யாட் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்குமுன் கலந்து பேச வேண்டும் என்றும் அதற்குக் “கூடுதல் அவகாசம் தேவை” என்றும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அவ்விவகாரம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் பேசிய அன்வார், ஒரு நிலைப்பாட்டுக்கு வர “ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு” இடமளிக்க வேண்டும் என்றார்.
“ஹுடுட் தொடர்பில் பாஸின் முயற்சியை யாரும் ஒதுக்கித்தள்ளக்கூடாது; சிறுமைப்படுத்தக் கூடாது. அவர்கள் விளக்கிக் கூறட்டும். கருத்துவேறுபாடு இருந்தால் அதை நயமாகத் தெரிவிக்கலாம்”, என்று அன்வார் கூறினார்.
டதொக் ஸ்ரீ அன்வார் அவர்களே நீங்கள் ஒருவர்தான் நியாமாக நடந்து கொள்விர்கள் என்று நினைத்தேன் இப்பொழுது நீங்களும் தடுமாருரிகள்.காலம் சென்ற அமரர் ஜெளுதொங் புலி கர்பால் சிங் இதை வன்மையாக எதிர்த்தார்,கண்டித்தார் பிறகு என்ன உங்களு கஷ்டம் ,அவகாசம் தேவை இல்லை அன்வர் அவர்களே உடனடியாக நீங்கள் ஒரு முடிவை எடுங்கள் இல்லை என்றால் அது உங்களுக்குதான் அபாயம்.மக்கள் உங்கள் முடிவை எதிர் பார்கிறார்கள் நினைவில் வையுங்கள் மக்கள் மன்றம் அபாயம்.
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா …………. என்னாலே அடக்க முடியலே. ஒரே ஒரு முறை ஹுடுட் சட்டத்தை அமல் படுத்தி பார்க்க அணைத்து கட்சி பாராளுமன்ற உருபினர்களும் ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும். 2018 ல் வருகிற தேர்தலில் எந்த கட்சி ஹுடுட் சட்டத்திற்கு அதரவு தருகிறதோ அந்த கட்சி அதிக பெரும்பான்மையில் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன்.
adutha election la otdu poda pathi perukku , athilum umno karanungalukku kai irukkaathe??
தமிழன் என்ற முறையில் சொல்லுகிறேன் நான் HUDUD சட்டத்தை அமோகமாக ஆதரிக்கிறேன்,,அப்பத்தான் நாட்டில் குற்ற சேவல்கள் அடங்கும் ,,அன்வர் அவர்கள் சொல்வது சரியே
என் பாட்டி ‘ஏய்கிறான்டா கூட்டாளி சூ**ல விடுடா தீவெட்டியன்னானா….’ என்கிற பழமொழியை அடிக்கடி கூறுவார்… அன்வார் பேச்சு அப்படிதான்
மோகன் நானும் ஹூடுடை வரவேற்கிறேன்… அப்பதான் நம்ம பயபுள்ளைங்க மதம் மாற்றது குறையும்…. கொஞ்சம் பிசகுநாலும் கை கால் தணித்தணீயா போய்டுமில்ல
நம் நாட்டில் இருக்கும் சிவில் சட்டங்கள் குற்ற ஒழிப்புக்களை தடுக்க போதுமானதே. குறை சட்டத்தில் இல்லை. சட்டத்தை செயல் படுத்தும் சட்டக் காவலர்கள் மீதே உள்ளது. எத்துனை ஹுடுத் சட்டம் வந்தாலும், அதையும் செயல்படுத்த சமய அதிகாரிகள் தவறுவார்கள். அங்கேயும் இலஞ்சமும், அதிகார துஷ்பிரயோகமும் தாண்டவமாடும். அரச குடும்பத்தினர் செய்யும் அவலங்களுக்கு ஹுடுத் சட்டம் பாயது. காரணம் அங்கே ஒவ்வொரு மாநில சமஸ்தானபதிகளும் அந்த சமயத் தலைவர்கள். அவர்கள் சொன்னா சரியா நீதிமன்ற தலைகளே சரணம் போடும். அப்புறம் அதற்க்குக் கீழே இருக்கும் செயல் அதிகாரிகள் என்ன செய்வார்கள்?. இப்ப ஜோஹூரில் நடந்துக் கொண்டிருக்கும் ஒரு அரச வழக்கு எப்படி ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறியாமல் இல்லை. அதர்மம் தலை விரித்தாடும். அரசனுக்கும் ஒரு நீதி குடிகளுக்கு ஒரு நீதி என்ற பழைய புராணம் மீண்டும் திரும்பிவிடும். கொஞ்சம் யோசித்து கருத்து எழுங்க. சித்தம் போன போக்குக்கு கருத்து எழுதாதிங்க. அப்புறம் சித்தம் கலங்கி சிதறிப் போய் விடுவீர்கள்.
நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தைப்பற்றி அறிந்து கருத்து கூறுவீராக…அமலுக்கு வரவியலா முயற்சிகளுக்குகாக ஏன் வீண் விவாதம் அன்பரே ??? ஏற்கனவே திரெங்கானுவில் செய்யப்பட்ட சிறு மாற்றங்களுக்கே இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. இதில், நாட்டின் அரசியலமைப்பின் முறையை மாற்றி அமைப்பதைப்பற்றி பேசுவதா???? ஐயோ…ஐயோ !!!!!!!