கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளும் கணிசமான நிதி உதவியைப் பெற்றுள்ளன. அந்நிதி உதவியைக் கொண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள், கணினி மையங்கள் அமைக்கப்பட்டதோடு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி உதவியின் பயனை மாநில இந்தியர்கள் கண்கூடாகக் கண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டி அவ்வாறான நிதி உதவி ஏன் இவ்வாண்டிலும் தொடரப்படவில்லை என்று செலயாங் பிகேஆர் தலைவர் கே. குணராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பிறந்து ஐந்து மாதங்களாகி விட்டன. தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு வரையில் வழங்கப்பட்ட நிதி உதவியின் வழி தமிழ்ப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களால் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இவ்வாண்டு இதுவரையில் எதுவும் நடைபெற்றவில்லை என்று கூறிய குணராஜ், “யுஎஸ்ஆர் தேர்தல் சம்பந்தமான பல பயிற்சி திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன”, என்றார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கு பொறுப்புடைய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் அவ்விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாண்டில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவற்றின் மாணவர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வாரியத்தின் தலைவர் க. உதயசூரியன் தொடர்பு கொண்ட போது கூறினார்.
“சிலாங்கூர் மாநில அரசின் தற்போதைய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய வஞ்சகப் போக்கை உடனடியாக மாற்றிக்கொண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி உதவியை மேலும் தாமதப்படுத்தாமல் உடனே அளிக்க வேண்டும்”, என்றார் உதயசூரியன்.
தமிழ்ப்பள்ளிகளை மட்டும் …
இவ்வாண்டில், இதுவரையில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்காமல் இருந்து வரும் சிலாங்கூர் மாநில அரசின் போக்கில் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது தமிழ்ப்பள்ளிக்களுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியை மட்டும் நிறுத்தி வைத்திருப்பதாகும். மலாய், சீன மற்றும் சமயப்பள்ளிகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டு விட்டது என்பதை வெளியிட்ட குணராஜ், “தமிழ்ப்பள்ளிகளை மட்டும் ஒதுக்கி வைத்திருப்பது ஏன்?”, என்று வினவினார்.
அட உங்க கட்சிதான் ஆட்சி செய்யுது. உங்க ஆளுதான் அங்கே எக்ஸ்கோவில் இருக்கின்றார். அங்கேப் போய் முட்டி காரியத்தைச் சாதிக்காமால் இங்கே வந்து அறிக்கை விடுவதின் மர்மமும் மாயமும் என்னவோ?. சுயவிளம்பரமா? நல்லா முன்னேரிவிடுவீர்கள். ம.இ.க. காரர்களின் அறிக்கை விளம்பரத்தைப் பார்த்து பார்த்து சலித்து விட்டது. அவர்களுக்குப் பதிலாக நீங்க ஆரம்பிச்சிட்டிங்ளா என்ற டவுட் வருது!.
கணபதி ராவ் 1 வருடமா என்ன செய்கிறார் என்று புரியாமல் இருக்கிறது . என்னை கேட்டல் சேவியர் இஸ் பெஸ்ட் . பதவியில் இருப்பது வேஸ்ட் . அவருக்கு நல்ல வருமானம் ஆனால் மக்களுக்கு வெறும் 0.
துணிந்து குரல் கொடுக்கணும் இல்லை பதவி துறக்கணும்.
கணபதி ராவ் 1 வருடமா என்ன செய்கிறார் என்று புரியாமல் இருக்கிறது . என்னை கேட்டல் சேவியர் இஸ் பெஸ்ட் . பதவியில் இருப்பது வேஸ்ட் . அவருக்கு நல்ல வருமானம் ஆனால் மக்களுக்கு வெறும் 0. துணிந்து குரல் கொடுக்கணும் இல்லை பதவி துறக்கணும்.
கணபதிராவா அல்லது சேவியரா என்ற பாகுபாட்டினை அகற்றி ஒரு சேர்ந்து செயல்பட்டால் பி ஆருக்கு இந்திய மக்களின் ஆதரவு நிலைக்கும்…!!!! நண்டினம்போல் தொடந்தால் மக்களின் எதிர்புக்கு ஆளாவீர்கள் என்பதை மறவாதீர்!!!!! மக்கள் மாற்றம் வேண்டுமென்று பி ஆருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். நிலைநிறுத்தச் செய்வது பி ஆரின் கடமை என்பதை நினைவில் கொள்ளவும்…
ம.இ.கா.காரர்கள் பத்திரிகைகளில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்களே, அது போல இருக்குது உங்கள் அறிக்கை! எங்களுக்குத்தான் வக்கு இல்லை. எதையோ எழுதிக் கொண்டிருக்கிறோம். நீங்களுமா? கணபதி ராவ்வைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேட்கிறீர்கள்!
இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் கைவசம் இருந்த தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதியை பிடுங்கி தாரை வார்த்து கொடுத்தது நமது இந்தியர்கள் தான் நாட்டுக்காரி கைக்கு போனதும் அது முதலை வாய்க்கு போனதுபோல் ஆகிவிட்டது. என்ன செய்யுறது குத்துதே நோவுதே என புலம்பிகிட்டு இருக்க வேண்டியதுதான்..!
அறிக்கை விட்டு நேரத்தை வேனடிக்காமல் சிலங்கோர் மாநித்தில் ulla
அணைத்து பெற்றோர் ஆசிரியர் சங்கம், palli vaariyam அனைவரும் அர்பாடடை manthiri பேசர் அலுவலத்தில் நடத்த வேண்டும். நம்பி வாகளிதற்கு நாம் மீண்டும் தெருவுக்கு வந்து பூரட வேண்டும். இவன்கல்லுக்கு உரைக்கும் அளவுக்கு sariyaana செருப்படி கொடுத்தே ஆக வேண்டும். மாணவர்களின் கல்விக்கு உதவிட பணம் வழங்க முடியவில்லை என்றால் நமக்கு ஏன் இவங்களின் ஆட்சி.