இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்வாரா என்று இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை. -BBC
மனித படுகொலை /இனப்போர் /தமிழர்களை கொன்ற உலக தமிழ் இன துரோகி ராஜபக்சேவை மோடி அழைப்பது அவரின் முதல் தோல்வியாகும். இவன் இல்லாமல் மோடி பிரதமர் ஆக வேண்டும் .உலக தமிழர்களின் வேண்டுகோள் !
வைகோ முதலிலேயே மோடிக்கு அறிவுருத்திருக்க வேண்டும் – இப்போது அது நடக்காது— எனினும் தனிமையில் மோடி அந்த துரோகியிடம் கண்டிப்பாக சொல்லமுடியும்-ஆனால் மோடி செய்வாரா? அங்கு தமிழருக்கான அரசியல் சட்டத்தை நிலை நிறுத்த முடியும். மீனவர்களையே காக்க முடியவில்லை இது நடக்குமா?
ராஜபக்சே தமிழர்த்களை படுகொலை செய்த மாபெரும் பாவி.மோடி அவர்களே தமிழர்களின் எண்ணங்களை புறக்கணிக்காதீர்.இது தனி தமிழ் நாடு அமைக்க வழிவகுக்கும்.
அந்த கொலைகார காட்டுமிராண்டி இந்தியாவின் மண்ணில் கால் பதிக்க விடாதீர்கள் .ஈவு இறக்கம் இல்லாத பிணம் தின்னும் கழுகு .
ஏன் நடிகை செயலலிதா இதை எதிர்காலமே
இப்போது புரிகின்றதா மோடியும், மஹிந்தாவும் மனித குலத்திற்க்கு எதிரானவர்கள் என்று.
தனி தமிழர் நாடு அமைவதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது!