தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக்கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கோபி, தேவியன் உள்ளிட்டவர்களை கொலை செய்தமைக்கு பழி தீர்க்கப் போவதாக பிரான்ஸிலிருந்து அவர்களை வழிநடத்திய சந்தோசம் சூளுரைத்துள்ளார்.
எனவே வடக்கு மற்றும் வன்னிப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டு வரும் படையினர் மற்றும் பொலிஸார் தனித் தனியாக கடமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடமைக்குச் செல்லும் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லுமாறும் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டு;ள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வன்னிக் காட்டுப் பகுதிகளில் அடிக்கடி தேடுதல் வேட்டைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல செய்தி. ஒவ்வொரு சிங்களவனும் திரும்பி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது