கிடெக்ஸ் இன்னும் போக்குவரத்து அறிக்கை சமர்பிக்கவில்லை

kidexசர்ச்சைக்க்குரிய  கின்ராரா- டமன்சாரா  விரைவுச்சாலை (கிடெக்ஸ்)க்கு  அங்கீகாரம் பெற  தேவையான ஆவணங்கள்  அனைத்தும்  தாக்கல்  செய்யப்பட்டிருப்பதாக கிடெக்ஸ்  சென். பெர்ஹாட்  திரும்பவும்  வலியுறுத்தி  இருப்பதை  பெட்டாலிங்  ஜெயா  மாநகர்  மன்ற (எம்பிபிஜே)  கவுன்சிலர்கள்  மூவர்  மறுத்தனர்.

“முழுமையாக்கப்பட்டு  இறுதிசெய்யப்பட்ட  போக்குவரத்து  தாக்க  மதிப்பீடு  அறிக்கை (டிஐஏ)  இன்னும்  தாக்கல்  செய்யப்படவில்லை  எனத்  தெரிகிறது.

“2014 ஜூன்  இறுதியில்தான்  அது  எம்பிபிஜே-க்கு  அனுப்பப்படும்”, என லீ  சுயெட்  சென்,  சிந்தியா  கேப்ரில், டாங்  ஃபுயு  கோ  ஆகிய  மூவரும்  கூட்டறிக்கை  ஒன்றில்  தெரிவித்தனர்.