எம்எச்370: கண்டுபிடித்தால் ரிம16 மில்லியன் பரிசு

mh370IndieGogo என்னும் வலைத்தளம் காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370-ஐக்  கண்டுபிடிக்கத்  தேவையான  முக்கிய  தகவலை  வழங்குவோருக்கு  அல்லது  நிறுவனத்துக்கு  வெகுமதி  வழங்க  முன்வந்துள்ளது. இதற்காக  பொதுமக்களிடமிருந்து  யுஎஸ்$5 மில்லியன்  நன்கொடை  திரட்டும்  இயக்கமொன்றை  அது  தொடங்கியுள்ளது.

நன்கொடை வழங்குவதற்கான  இணையப் பக்கம் இன்றிரவு  8  மணிக்கு  மலேசியாவில் தொடக்கி  வைக்கப்படும். இன்றுடன்  அந்த  விமானம்  காணாமல்போய்  3 மாதங்கள்  ஆகின்றன.  மார்ச் 8-இல்  அது  ரேடார்  கருவிகளிலிருந்து  மறைந்தது.