எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியவர் என்ற சந்தேகத்துக்கு உரியவராக இருப்பவர் இகோர் கீர்கின். இவர், சுயமாக பிரகடனம் செய்துகொள்ளப்பட்டிருக்கும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்காப்பு அமைச்சராவார்.
முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவருக்கு ஸ்ட்ரெல்கோவ்- சுட்டுத்தள்ளுபவர்- என்ற பட்டப்பெயரும் உண்டு என சிட்னி மோர்னிங் ஹெரால்ட் கூறுகிறது. உத்தரவுக்குக் கீழ்ப்படியாத சொந்தப் படையினரையே சுட்டுத்தள்ளி விடுவாராம்.
ரஷ்ய சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு செய்திதான் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திரும்பியது. “நாங்கள்தான் எச்சரித்திருந்தோமே- எங்கள் வானத்தில் பறக்க வேண்டாமென்று”. இச்செய்தியை பதிவிட்டவர் கீர்கின் என்று கூறப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்டது ஒரு சிவில் விமானம் என்பதும் அது யுக்ரேய்னின் சிவில் இராணுவ விமானம் அல்ல என்பதும் உறுதியான பின்னர் அப்பதிவு அகற்றப்பட்டது.
இவரு இல்லை!!!!!!!!!!!!!!!!!!
பல ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரிய பயணிகள் விமானதை ரஷ்ய சுட்டு வீழ்த்தியது .,அந்த சோகம் இன்னு ம் நெஞ்சை விட்டு அகல வில்லை .மீண்டும் இன்னொரு துயரம்!!!!
நல்லவேளை சடாமும், ஒசாமாவும் இல்லை ! ரஷியாவே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் !
ஒரு தனி மனித இயக்கமா ? ருசியா ,உக்ரைன் அரசு சார்பு தீவிர வாதிகள் என்றால் அரசே தீவிர வாதிகள் அப்படியானால் அமெரிக்காதான் சொல்ல வேண்டும். பங்கீ மூன் வெடி எங்கு எப்படி வைப்பார்? MH 370 இதே கதிதான் ஆனால் அது கடலில் பாய்ந்துள்ளது. எல்லாம் உப்பு தண்ணி குடிக்க போலாம். பார்த்தேன் உக்ரின் AIR ROUTE குண்டை கையில் வைத்துள்ள தீவிர வாதிகள் பாதையில் இது நாள் வரை பயணம் செய்த பயங்கர வாத விதியை?
1983 என நினைக்கிறேன். தென் கொரிய போயிங் 747 பயணிகள் விமானத்தை ரஷ்யா அதன் நாட்டின் எல்லையுள் அனுமதியின்றி (தவறுதலாக?) பயணித்ததால் எந்த எச்சரிக்கையுமின்றி சுட்டு வீழ்த்தியது. 1988ல் பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் USS வின்செனேஷ் போர்க்கப்பல் அது இருக்கும் நிலைக்கு அருகாமையில் பறந்ததால் ஈரானின் பயணிகள் விமானம் ஒன்றை (தவறுதலாக?) சுட்டு வீழ்த்தியது. 2001-ல் உக்ரேன் 78 பயணிகளைக்கொண்ட ஒரு ரஷ்ய விமானத்தை அதன் கிரிமியாவின் வான்வெளிக்கு உயரே ‘தவறுதலாக’ சுட்டு வீழ்த்தியது. ஒரு பெரும் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது இது 4வது என நினைக்கிறேன். சிறு பயணிகள் விமானங்கள் சில அங்கும் இங்கும் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. மனிதனின் ஆக்கத்திற்கு 6ம் அறிவை இயற்கைக் கொடுத்துள்ளது. ஆனால் அவன் அதனை பல வேளைகளில் தன அழிவுக்கும் உபயோகித்துக்கொள்கிறான்..!!
10,000 மீட்டருக்கு உயரே வான் போக்குவரத்து அனைத்துலக வான்வெளி என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், இதற்கு முரணாக நிகழ்ந்த இந்த அநாகரீக இழிவுச் செயல் கண்டிக்கத்தக்கதே.. ஐ நா, இந்த அட்டூழியத்துக்கு ஒரு சரியான ஏற்பத்தக்க முடிவினை கையாளவேண்டும்.. இல்லையேல், ஐ நா இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே!!!!!..
அறிவுக்கொழுந்து, ஐநா இல்லை என்றால் ஒரு பிரச்சனை உண்டாகும். அதன் பொதுசெயலாளர் உட்பட கொளுத்த சம்பளம் வாங்கும் பல ஆயிரம் பேருக்கு வேலை இல்லாமல் போய் விடும். இந்த ஐநா ஓரளவு நன்கு செயல்பட வேண்டுமானால் முதலில் அதன் “பாதுகாப்பு மன்றத்தில்” நிரந்தர உறுப்பினர் தகுதியுடன் வீட்டோ பவர் கொண்டுள்ள 5 நாடுகளுக்கும் அந்த பவர் இல்லாமல் செய்ய வேண்டும். இல்லை என்றால் ஐநாவை இழுத்து மூடுவதுதான் நல்லது. அல்லது அது சும்மா வீம்புக்குக் குறைத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
முதலலில் நம்ம நாட்து தலைவனுங்க அறிக்கை விடும்பொழுது தீர ஆலோசித்து அறிக்கை விடனும் கங்கோங் மாதிரி அறிக்கை விட்டால் அதுவும் இஸ்ரேல் அண்ட் ரஷ்யா இருவரும் ஒருவர் ஒரே இனம் இவனுங்க பாலஸ்தீனுக்கு ஆதரவாக பேசிய பேச்சு ஒன்றுமே அறியாத பயணிகளை பலி வாங்கி விட்டது இதுதான் உண்மை , இஸ்ரேல் காரன் தமிழன் சீனன் போல சகிப்புதன்மை அற்றவன் தம்பியோ தம்பி அவனுங்க வீண் வம்புக்கு போக மாட்டனுங்க OIC யே சூதையும் வாயும் பொத்தி கிட்டு இருக்கும்போது நம்ம ஊர் மக்களுக்கு ரத்தம் கொதித்தால் வந்த வினை .
kamapo அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட தாக்குதல்களுக்கு உள்ளாகிய அனைத்து விமானங்களின் சிறு பகுதியாவது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த தாக்குதல்களுக்கும் உள்ளாகாத நமது MH370, குறைந்தது கக்குஸ் தொட்டிக் கூட கண்டு பிடிக்கும் வாய்ப்பு எவருக்கும் கொடுக்காமல் சாதனை படைத்துள்ளோம். ungalathu pattiyalil ithanaiyum inaiththuk kollungal.