இன்று நடந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம், கடந்த வியாழக்கிழமை உக்ரேய்னில் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயலுக்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
எம்எச் 17மீது தீர்மானம் ஒன்றைத் தாக்கல் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையும் அதனால் சடலங்களை மீட்டெடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தையும் கண்டு மலேசியா ஏமாற்றமும் ஆத்திரமும் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
“ஆனாலும், உண்மை தெரியும்வரையில் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை”, என்றார்.
“வர்த்தக விமானமான எம்எச் 17-ஐ சுட்டுவீழ்த்தியது மிகக் கொடூரமான, ஈவிரக்கமற்ற, வன்முறை சார்ந்த ஒரு குற்றச்செயல்”, என்றும் அவர் கூறினார்.
அச்சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறியும் முயற்சி தொடரும் என்று கூறிய நஜிப், உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க அரசாங்கம் விடாமல் போராடும் என்றும் உத்தரவாதம் அளித்தார்.
இவ்விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் கேலாங் பாத்தா எம்பி-யும் டிஏபி ஆலோசகருமான லிம் கிட் சியாங்குக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
உலக மக்களும்,உலக நாடுகளும் மலேசியாவுக்கு உறுதுணையாக இருக்கும் உறுதி .
மண்ணிக்கவும்,ஸ்ரீ லங்காவில் ஒரு இனமே அழிக்கப்பட்டபோது,பிரதமரிடம் எவ்வளவோ முறையிட்டோம்,வாயே திரக்கில்லையே,உலக கன்டனத்தில் பங்குகொள்ளவில்லையே.ராட்ஷச குழி தோண்டி குவித்து வைத்த பிணங்களை இயந்திரம் கொண்டு தல்லி மூடிய கொடுமைக்கு உலகமே எதிர்த்து குறள் கொடுத்தது மலேசியாவை தவிர்த்து.அது மட்டுமின்றி இந்நாட்டுக்கே அழைத்து விருந்து பரிமாறபட்டது.கணவன் முன்னே தன் மக்களை கதர கதர கற்பழிப்பதற்கு சமம்.எம் ரத்தமெல்லாம் உறைகிறது ப்ரபாகரன் மகன் என்னபாவம் செய்தார் போதும்,நாராயண நாராயண.
இந்த மலசிய BN ஆட்சி அழியணும் விமானம் நன்றாகவே உலகும் முழுதும் ஆபத்து இல்லாமல் பறக்கலாம்
டேய் உங்களால கண்டனம்தான் தெரிவிக்க முடியும் போர் நடத்த துப்பு கிடையாது ,,,எங்கடா லூசு பயல்கள ,லேட்சக்கனக்கான இலங்கை தமிழர்களை கொள்ளும் பொது எங்கடா கண்டனம் தெரிவிக்க வில்லை .உங்க உயிரு பெருசு ,தமிழன் உயிரு சிருசாடா ?