காலிட் இப்ராகிமே சிலாங்கூர் மந்திரி புசாராக தொடர வேண்டுமென்று கூறும் பாஸ் இளைஞர் பகுதி, அவரை மாற்றுவதற்காகக் கூறப்படும் காரணம் “சரியானதல்ல” என்கிறது.
பாஸ் சிலாங்கூரைப் போலவே அதன் இளைஞர் பகுதியும் காலிட் தொடர்ந்து சிலாங்கூர் மந்திரி புசாராக இருப்பதையே விரும்புகிறது என அதன் தலைவர் ஷியார்ஹான் ஹுமாய்சி அப்துல் ஹாலிம் கூறினார்.
பிகேஆரின் நிலைத்தன்மைக்காக அவரை மாற்ற வேண்டும் என்று கூறி மக்கள் பக்காத்தான் ரக்யாட் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கெடுத்து விடக்கூடாது என்றாரவர்.
இவர் இருக்றதுல அப்படி என்ன நன்மை
பி கே ஆர்,டி எ பி இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?மேஜோரிதி யாருக்கு அதிகம் அவர்களே மெந்தெரி புசார் ஆகட்டும்.ஒரு கையை தட்டினால் ஓசை வராது,இரண்டு கைகளும் தட்டினால் தான் ஓசை வரும்.
வண்டி நல்லா தானே போய்கிட்டு இருக்கு, இடையில ஏன் டிரைவைர மாத்துராங்க?
இந்தியர்களுக்கு இவரால் நன்மையில்லை என்கின்ற போது இவர் தொடர்வதில் நமக்கு என்ன நன்மை?
அரசியலில் நேர்மையான யாரையும் விட்டு வைக்க மா டார்கள் நைனா .
நம்மவர்களுக்கு நல்லது செய்ய இந்நாட்டில் யாரும் கிடையாது. பேருக்குதான் MIC மற்றும் இன சார்பற்ற கட்சிகள் நம்மவர்களுக்கு வாக்குறுதியை மட்டும் அள்ளி தெளித்து கொண்டிருக்கின்றனர். பிரதமன் வாக்குறுதியை நம்பி hindraf நம்மை மடையனாக்கியது.இதெல்லாம் சம்பந்தனால் ஆரம்பிக்கப்பட்டு இதுநாள் வரை நம்மை எல்லாம் ஓரங் கட்டி மலாய் காரன் கோடி கட்டி பறந்து கொண்டிருக்கிறான்.
இத்தனை கேள்விகளுக்கு பதில் வெகு விரைவில் உண்டு. எக்காலத்தில் எதிர்க்கட்சி அரசாங்கம் ஆளும் கட்சிக்கோ/ தலைவருக்கோ ஆதரவாக பேசியுள்ளது. சோலையன் குடுமி சும்மா ஆடாது!!!
பாஸ் பகாதானில் இருந்து வெளியேற வேண்டும்
MOHAN mohan கூறுவது முற்றிலும் உண்மை. பக்காத்தானில் இருந்து பாஸ் வெளியேறவேண்டும். இல்லையேல், PKR ,DAP போன்று குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாஸ் கட்சியும் குட்டிச்சுவராகிவிடும்.
சிங்கம் சொல்வதும் உண்மை ,மகாதிர் தன் மகனை MP யாக ,அப்பன் முடிந்தும் மகன் பிரதமராக ஆவதும் போல தானே ,சிங்கம் குரிப்பிடவதும் அதைதான் என்று நினைக்கிறேன்
அன்பர்களே, எம் பி மாற்றத்துக்கான அழுத்தத்தின் முக்கிய காரணங்களை யூகித்து கருத்துரைப்பீர். அரசியல் தந்திரமறியா எம்மைப்போல் உள்ள மக்களுக்கு ஓரளவு புரியுமல்லவா!!! செலாங்கொர் அரசியலை ஒட்டி எழுதுங்கள். சொந்த கதை ஊர் கதையெல்லாம் வேண்டாம்.
சின்ன எறும்பு சார் எங்க போடறாங்கா..போட்டா படிங்க !!
இது நவீன காகா காக்காகா காலம்.
காலீத் தான் MB என்று 12வது பொது தேர்தலில் மக்களை மயக்கி …பிறகும் 13வது பொது தேர்தலில் அம்பாங் உளு கிளானில் கலீட்தான் சரியான MB 14த் தேர்தலுக்குள் மாநிலம் ஒ ஓவென்று வந்து விடும். நானும் அதாவது அன்வாரும் PM ஆகிவிடுவேன் புத்ரா ஜெயா ரபிஜி நிதி அமைச்சராக இருப்பார் அது இது PTTP எல்லாம் கட்ட வேண்டாம்?
இன்னும் வாய்க்கு வந்த வராலற்றுப பிழைகள் இவர் சேதத்தையும் சொல்லி “செமுவ அனக் சாயா ” நான் ஆணையிட்டால் பாட்டும் ஆட்டமும் தொப்பியும் சாட்டையும் ஆகா என்ன வேட்டைக்காரன் வேடம்….?
நடந்த கதை தெனாலிராமன் கதை…கேளுங்க !
கட்சியில் காலீட் வரக்கூடாது நுசுதினை போட்டால் அஸ்மின் வருவார் அச்மினை அசிசவுக்கு தடா நம் …நான் போக வேண்டிய இடம் உறுதி…ஆக அக்காவை வைத்து நானும் கட்சியில் போட்டி போடுவதுபோல போடுவேன்…எங்களை எதிர்த்து யாரும் வரமாட்டாங்க.
பதிவே இல்லாத பாகாததான்ல எனக்குத்தான் அதிகாரமற்ற மட்டிங்க தந்த KU போஸ் இருக்கே ? மக்க பெஹ் பெஹ் !
56 மில்லியன் 16 மில்லியனா குறைச்சிட்டாங்க ” எனுமோ எதோ ” தண்ணி வேற வரலா ! ஏற்கனவே என் காலத்துல பஹங் செலங்கோர் தண்ணி பைப்பு 950 மில்லியன் MB யால வேற ஆப்பு !!
ரபிசி வேற ஜெய்கிலா ஒரே எனக்கும் இல்லாம் இறங்கு நிலை ..
மீண்டும் ஏற சீனன் செஞ்ச ஏணி வேண்டாம் சொந்த படிகட்டு இருக்கு ஏத்துவோம் என்று MB யை இறக்குவோம். இதில் என்ன கதை என்றால் தெனாலி ராமன் இன்றைய MB பாவம்… 3 பில்லியன் காசு சேர்த்து வைத்துள்ளார் …கை அறிக்குது பிச்சிக்க பல குரங்குகள் போட்ட கைங்கரியம் ” பொருள் இலார்க்கு இவுலகம் லேது அருள் இல்லார்க்கு அவுலகம் லேது.” இரண்டுமே இலார்க்கு அரசியல் ஒரு சொத்தை! சுண்ணாம்புதான் அடிக்க முடியும்.
பாவம் DAP யும் பாசும் மண்டையை போட்டு சொரியுதுங்க! கட்டிப போட்டு கூண்டுக்குள் இருக்கும் BN வேட்டிங்!! என்ன நடந்தாலும் வானம் ஈராமாகும் வரை தண்ணி டப்பாவில் தான் ..வான் வந்தால் வானம் இடி இடித்து மழை ஆற்றில் மிதக்கப போவதில்லை. சிலாங்கூர் சிக்கல் ஒரு இடை தேர்தலில் முடியும்.DAP ஆட்சியில் ஒரு மலைகாரருக்கு நல்ல வாய்ப்பு உண்டு ஆனால் ஆளைக்காணோம் ?
விந்து விட்டவன் நொந்துககெட்டான் என்பார்கள். அரசியலில் நொந்து போனவன் இப்படிதான் தானும் வாழாமல் தன் மக்களையும் வாழ விடாமல் சைத்தான் போல நோண்டிக்கொண்டே இருப்பான் . தலை சுத்தி …நாராயாணா நடப்பது எல்லாம் அரசியல் கொடூரம். டீம் போட்டு ப்ளான் பண்ணி மக்களை பண்டரான்பா ? நேரம் வந்து விட்டதால் நேர நிர்வாகம் கருதி சுய இம்பாக் செய்றான்.
ஈய குட்ட தண்ணி கத மாயமா போச்சி உள்ளே பூந்த சந்தியாகோ வேற காணோம்.பள்ளிக்கும் கோயில்லுகும் பாலர் பள்ளிக்கும் தருவதை எல்லாம் தலைவன்கள் அடிக்க 27 மில்லியன் ஸ்ரீ முருகன் தம்பி சின்னபையன் கத சொல்றார்?
கொடுப்பதை எல்லாம் “டின்றான்கள்” இன்னும் வேற தரல் தரல என்று கூப்பாடு வேற ….வைத்தால வாயில போக !
ஆமாம் நமக்கு என்ன வந்தது வரப்போவுது ? ஆண்டானது போனாலும் அழுது புரண்டாலும் மாண்டான் வருவனோ நாம் போம் அது வலி /வழி என்று விடிய விடிய ஆந்தை கதைதான் !
அன்று காகங்கள் கூடி சாபிட்டன இன்று சாப்பாட்டில் எதோ இருக்கும் கூடி கூட்டி அவன் சாவதை பார்த்து விட்டு ஓடிபுடலாம். காலம். காக்கா காலம்.
MB யை மாற்றுவது திண்ணம் மாக்கள் கூட்டணி சின்னாபின்னமும் யப் கள் சிதறலும் அரசியலில் சாதரனம்மப்பா காத்திருந்து கடுங்காவல் செய்வோம். வாழ வழி விடு வாழ்த்தும் இந்த வையம. நோட் அரசியல்!
கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் இந்தக் காலிட்டை எவரும் குறைகள் சொல்லவில்லை.சீனர்களும்,இந்தியர்களும் , மலாயரும் ஆதரித்தனர். சேவியர் நல்லவரோ கெட்டவரோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பதவியில் இருந்தபோது அவர் கேட்டதை எல்லாம் இந்தக் காலிட் செய்து கொடுத்தார். அதற்குப் பிறகு பதவிக்கு வந்த காலிட்டுக்கு மேல்நிலை மலாயரிடமிருந்து நெருக்குதல் வந்தது. மனிதர் மற்ற இனத்தவர்களை மதிப்பதே இல்லை எனும் குற்றச் சாட்டு. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கே தெரியும்படி எந்த நல்ல திட்டமும் இல்லை. மலாயரில் சிலரும், சீன,இந்திய பிரதிநிதிகள் யாரிடம் புகார் கொடுப்பார்கள்? அன்வாரிடம்தானே. அவருக்கு நெருக்குதல் அதிகரிக்க, அடுத்தத் தேர்தலை எண்ணிப்பார்த்த அன்வார் அதிரடி முடிவுக்கு வந்தார். மற்றவனைப் போட்டால் நம் பேச்சைக் கேட்க மாட்டான்; அவனை ஒவ்வொரு முறையும் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது என்று எண்ணிய அன்வார் தன்னுடைய இல்லத்தரசிக்கு வாய்ப்பனைத் தந்துள்ளார். காலிட் அம்மோவின் அபிமானியாக எப்படி ஆனார் ? ஏன் அம்னோ தலைவர்களுக்கு காலிட் மீது இவ்வளவு அன்பு? தலைக்கு எப்படி செல்லப்பிள்ளையா மாறினாரு காலிட்? என்பதெல்லாம் சிதம்பர இரகசியம்! ஒரு தலைவனென்றால் தான் ஆளும் மாநிலத்தை நம்பர் ஒன்னாக்கவும் எல்லா இன மக்களையும் ,மனிதசக்தியையும் முழுமையாக பயன்படுத்தி மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவர முழுமூச்சா செயல்படணும். மலாயருக்கு மட்டுந்தான் தலைவன் பொலவும் மாநிலத்தில் இருக்கிற மற்றவரெல்லாம் வந்தேறிங்கிற அம்னோ மனப்பாண்மையில நடந்துகிட்டா இப்படித்தான் நடக்கும்!
ஐ.டி.எம்மில் எப்படி இடம் கிடைத்தது,யார் சாசனம் எழுதியது,ஹாக் ஓராங் மிலாயூவை யார் சிதைத்தது,இப்போது காலீட் கொட்டவர் அப்படி தானே.இதனால் காலீட்டுக்கு கொலை மிரட்டலெல்லாம் வந்ததே.உலகில் உள்ள எல்லா மலாய் மாணவர்களும் எதிர்தனர்,ஸ்டீக்கர் வரை அச்சிடபட்டு வந்தது,”ஐ.டி.எம் ஹாக் ஓராங் மிலாயூ’,இன்று டி.எ.பி,காலீட்டுக்கு எதிர்ப்பாக குறல்கொடுக்குது,நாராயண நாராயண.
டி.எ.பி. சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவது இப்போது தான் பெரும்பாலோருக்கு தெரிய வருகிறது.
முதலில் PAs சை ஒலித்து கட்டுங்கள்
இஸ்லாமிய வங்கிக் கடன் விவகாரம், நீர்ப் பிரச்சனை, பைபிள் விவகாரத்தை கையாண்ட முறை, இந்திய மக்களுக்கான சேவைகள் போன்ற விவகாரங்களில் எம் பி கையாண்ட முறையைப்பற்றி அன்பர்களுக்கு அறிந்ததை யாரேனும் கருத்துரைப்பீரா???
ஒன்று புரிகிறது. அம்னோ காலிட்டை தனது பிடிக்குள் கொண்டு வருவது தெரிகிறது. இந்தியர்களின் பிரச்சனைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த மாற்றத்தின் மூலம் நல்லது நடந்தால் சரி.