கிளர்ச்சிப்படையினர் ரஷ்யாவிடமிருந்து BUK ஏவுகணைகளைப் பெற்றிருப்பதை ஒப்புகொண்டதாக வெளிவந்துள்ள செய்தியை உக்ரேன் பிரிவினைவாத படைகளின் தலைவர் அலெக்சாண்டர் கொடாகோவ்ஸ்கி மறுக்கிறார் என த கார்டியன் அறிவித்துள்ளது.
ராய்ட்டர் நேர்காணல் ஒன்றில், அவர் அவ்வாறு கூறியதாக சொல்லப்படுகிறது. கொடாகோவ்ஸ்கி-க்கு நெருக்கமானவர்களும் அச்செய்தியை மறுத்துள்ளனர்.
எம்எச்-17 விழுந்து நொறுங்கியதிலிருந்து உக்ரேன் அரசாங்கமும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து பெற்ற ஏவுகணைகளைக் கொண்டு கிளர்ச்சிப்படையினர்தாம் அதைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகின்றன. கிளர்ச்சிப்படையினரும் ரஷ்யாவும் அதை மறுத்து உக்ரேன்தான் அதற்குக் காரணம் என்று கூறியுள்ளன.