பாஸ் உயர்தலைவர்களில் எத்தனை பேர் மத்திய செயற்குழு உறுப்பினர் முகம்மட் ஜுஹடி மர்சுகிபோல் “இனவாத, ஜனநாயக-எதிர்ப்புக் கருத்துக்களை”க் கொண்டவர்கள் என்பதை பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தெரியப்படுத்த வேண்டும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குறுந்தகவல் பரிமாற்ற கைபேசி செயலியான வாட்ஸ் எப் (Whatsapp)-இல், பாஸ் மத்திய செயற்குழுவினர் தகவல்களைப் பரிமாறிக்கொண்டபோது சிலாங்கூரில் பாஸ் அம்னோவுடன் சேர்ந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்ற கருத்தையும் வேறு பல கருத்துக்களையும் ஜுஹடி முன்வைத்ததாகக் கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்தபோது ரபிஸி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
%d bloggers like this:
பாஸ் கட்சியில் இரண்டு பிரிவு உள்ளது,ஒன்று உலாமா பிரிவு,
இன்னொன்று உலாமா இல்லா பிரிவு. மாபுஸ் ஒமார்,மாட் சாபு ,
இன்னும் சிலர்உலாமாஇல்லா ிரிவை ேர்ந்தவர்கள்,இவர்களை
நம்பித்தான் மலாய்காரர் அல்லாதார் பாசுக்கு ஒட்டு போட்டார்கள்,
இவர்கள் உண்மையிலே நல்லவர்கள்,பாகாதானுடன் ஒத்து
போகிறவர்கள்,மற்றவர்கள் ….???? தான்.
புது விசயம் நன்றி,இப்படி இருக்கவேண்டும் செய்தி,வாழ்க நாராயண நாமம்.